சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை?

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தில், அவருக்கு உக்ரைன் நாட்டு நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இது தவிர ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் தெலுங்கி உருவாகவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப். 10 அன்று காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘எடெர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு இவர் ஜோடியாக நடிப்பது குறித்து படக்குழு இன்னும் அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

இதனிடையே, அனுதீப் உடனான படம் தவிர்த்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்துக்கான பணிகளும் தொடங்கவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

5 mins ago

சினிமா

26 mins ago

இந்தியா

29 mins ago

வணிகம்

44 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

59 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்