சென்னை பட விழா | அண்ணா | டிசம்.17 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.30 மணி | THE MAN WHO SURPRISED EVERYONE / TCHELOVEK KOTORIJ UDIVIL VSEH | DIR: NATASHA MERKULOVA & ALEKSEY CHUPOV | | RUSSIA | 2018 | 105'

சைபீரியன் காடுகளில் தைரியமாக வேலை செய்து வரும் மாநில வனக் காவல் அதிகாரி ஈகோர். தனது குடும்பத்தால், கிராமத்தினரால் விரும்பப்படும், மதிக்கப்படும் ஒருவன். அவன் மனைவியோடு சேர்ந்து இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து வருகிறான். ஆனால் ஒரு நாள் தனக்கு கான்சர் இருப்பதும், தான் வாழ இரண்டு மாதங்கள் மட்டுமே உண்டு என்றும் தெரிந்து கொள்கிறான். நோயை எதிர்க்கும் ஒரு வழியாக பெண் வேடம் அணிந்து கொள்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகளே கதை.

21 wins & 22 nominations

பகல் 12.00 மணி | CARGA / CARGA | DIR: BRUNO GASCON | PORTUGAL | 2018 | 113'

சட்டவிரோத குடியேறிகள் சிலரை ஏற்றிக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து போர்ச்சுகலுக்கு ட்ரக் ஒன்று புறப்படுகிறது. அமைதியான வாழ்வை தேடி அவர்களது வாழ்வில் திடீர் ஏற்படுகிறது. ஆண்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பலவந்தம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களில் விக்டோரியா என்ற இளம்பெண் அவர்களை துணிச்சலுடன் எதிர்க்கிறாள். ப்ரூனோ காஸ்கன் இயக்கியுள்ள இந்த படம் உலகமெங்கும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

11 wins & 23 nominations

பிற்பகல் 2.30 மணி | SONS OF DENMARK / DANMARKS SøNNER | DIR: ULAA SALIM | DENMARK | 2019 | 120'

2025 டென்மார்க்கில் நடக்கும் கதை. ஒரு பெரிய வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் தீவிரவாதம் தேசம் முழுவதும் உக்கிரம் பெறுகிறது. இன ரீதியான கலவரங்கள் அதிகமாகின்றன. பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில், தீவிரமனா இனவெறி கொண்ட அரசியல் தலைவர் மார்டி நோர்டால் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்று கணிக்கப்படுகிறது. 19 வயது ஸக்காரியா ஒரு தீவிரவாத அமைப்பில் இணைகிறான். அங்கி அலி என்பவனுடன் நட்பு ஏற்படுகிறது. புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகத் திரும்பும் தேசத்தின் தற்போதைய நிலையில் இருவருக்குமே உடன்பாடு இல்லை. அதற்கு எதிராக போராட முடிவெடுக்கின்றனர். ஆனால் இருவருமே அதிகார வர்க்கத்தின் கைப்பாவைகளாகவே இருக்கின்றனர். இவர்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது அவர்களின் சகோதரத்துவம் பாதிக்கப்படுகிறது, அவர்கள் செய்யும் காரியத்தின் விளைவுகள் அவர்களின் வாழ்வை பெருமளவில் பாதிக்கப்போகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.

3 wins & 15 nominations.

மாலை 4.30 மணி | THE MOVER / TEVS NAKTS | DIR: DAVIS SIMANIS JR.| LATVIA | 2018 | 90'

ரஷ்யா மற்றும் ஜெர்மனியின் அண்டை நாடுகளைத் தாக்கும் தாக்குதல்கள் லாட்வியன் நாட்டினரின் கூட்டணிளை ஆக்கிரமிப்பு பற்றிய அனுபவங்களுடன் சிக்கலாக பிணைந்துள்ளது, நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் எதிராக மாறுகிறார்கள். இது யூத சமூகத்தின் மீது பிரித்தல் மற்றும் தாக்குதல்கள் சிக்கலை அதிகப்படுத்துகிறது. வின் போராட்டத்தை நாங்கள் கவனிக்கிறோம், பலரைப்போலவே ஜானிஸ் லிப்கேவும் போராடுவதைக் காண்கிறோம். அவர் தன்னைச் சூழ்ந்துள்ள பேரழிவிலிருந்து தப்பிச்செல்ல புதிய ஆட்சியின்கீழ் வாழ முயற்சிக்கிறார். தனது குடும்பத்தைக் காக்கவும் முடிவு செய்கிறார்.

மாலை 7.15 மணி |CURIOSA / CURIOSA | DIR: LOU JEUNET | FRANCE | 2019 | 107'

1895-ம் ஆண்டு. பாரிஸில் பியர் என்னும் இளங்கவிஞன் இருந்தான். அவனும் சக நண்பனுமான ஹென்றியும் மேரி என்னும் அழகுப் பெண்ணைக் காதலித்தனர். நண்பர்கள் இருவரின் வழிகாட்டியும் க்யூபா கவிஞருமான ஜோஸ் மரியா டி ஹெரிடியாவின் மகள்தான் மேரி.பியரை மேரி ஆத்மார்த்தமாகக் காதலிக்கிறாள். ஆனால் தந்தையின் கடனை அடைக்கவும் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர அப்பா விரும்பியதாலும் ஹென்றியைத் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனாலும் பியரை மறக்க முடியாமல் தவிக்கிறாள் மேரி. அல்ஜீரியா செல்லும் பியர், ஜோகர் என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். சிற்றின்ப புகைப்படக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இரண்டு வருடங்கள் கழித்து மேரி - பியர் சந்திப்பு நிகழ்கிறது...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்