சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.12 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

பிற்பகல் 2.00 மணி | DOLLYBIRDS / CSINIBABA | DIR: PETER TIMAR | HUNGARY | 1997 | 100'

1962 கோடையில் கம்யூனிஸ்ட் ஹங்கேரியில் நடக்கும் கதை. ஹங்கேரியின் கம்யூனிஸ்ட் ஆட்சி சகாப்தத்தின் மிகைப்படுத்தப்பட்ட இசை பகடி இப்படம். நிறைய பாடல்கள். அனைத்தும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் காலகட்டம், சிந்தனை முறைகள், பிரச்சாரம் ஆகியவற்றை விமர்சனம் செய்யக்கூடியவை. இதனிடையே ஒரு கதை. டீன் ஏஜ் அட்டிலா (சாண்டோர் அல்மாசி) ஒரு திறமை போட்டியைப் பற்றி அறிந்துகொள்கிறார், இரும்புத் திரைக்கு வெளியே செல்ல ஒரு அரிய வாய்ப்பு. ஹெல்சின்கியில் நடைபெறும் சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறார். அட்டிலாவின் பெரும்பாலான நண்பர்கள் பரிசை வெல்வதற்கு சமமான திறமையில் உள்ளவர்கள் என்றாலும், முதல் பரிசை வெல்வதற்கான தகுதியுடையவராக அடிலா இருக்கிறார்.

மாலை 4.00 மணி | THE SHARKS / LOS TIBURONES | DIR: LUCIA GARIBALDI | URUGUAY, ARGENTINA, SPAIN | 2019 | 80'

14 வயது ரோசினா ஒரு இளம் பெண், இளமைப் பருவத்தின் வாசலை நோக்கி தனது வழியை உணர முயற்சிக்கிறாள், அவளது தடுமாறும், முரண்பட்ட உள்ளுணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்படுகிறாள். ஒரு சிறிய கடற்கரை நகரத்தில் கடலில் வந்துள்ளதாக ஊரில் பீதி பரவியுள்ள நேரம் அது. ரோசினா கடலில் தான் சுறாவைக் கண்டதாக தனது தந்தையிடம் கூறுகிறாள். ஆனால் அவர் அதை நிராகரிக்கிறார். எனினும் உள்ளூர் மீனவர்கள் சுறாவை வேட்டையாட போராடத் தொடங்குகிறார்கள். இதற்கிடையே தனது மூத்த ஊழியரிடமும் ரோசினாவின் காதல் வளர்கிறது. ரகசிய உளவியலின் பாவனைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள நடிகை ரோமினா பெண்டான்கூரின் முக்கியமான படம்.

மாலை 7.00 மணி | BUOYANCY / BUOYANCY| DIR: RODD RATHJEN | AUSTRALIA, FRANCE | 2019 | 93'

தென்கிழக்கு ஆசியாவில் நவீன அடிமைத்தனத்தை புயோயான்ஸி திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. கிராமப்புற கம்போடியாவில் வாழும் 14 வயது சக்ரா, தனது கடுமையான தந்தையுடன் ஒரு வெடிக்கும் மோதலுக்குப் பிறகு அவரிடமிருந்து பிரிந்துசெல்கிறான். எல்லையைத் தாண்டி தாய்லாந்திற்குள் செல்ல நன்கு ஊதியம் பெறும் தொழிற்சாலை வேலையைப் பெறுவதற்கான நம்பிக்கையில் அவசரத் திட்டங்களில் ஈடுபடுகிறான். ஆனால் சிறுவன் உடனடியாக இரக்கமற்ற தரகரால் மோசடி செய்யப்படுகிறான், ஒரு மோசமான மீன்பிடி இழுவைப் படகில் ஏறுகிறான், 14 வயது சக்ரா ஒரு தாய்லாந்து மீன்பிடிக் கப்பலின் கேப்டனுக்கு அடிமைத் தொழிலாளியாக விற்கப்படுகிறான் 14 வயது சக்ரா. கப்பலில் கேப்டனின் ஆட்சி கொடூரமானது மற்றும் தன்னிச்சையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

57 mins ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்