சென்னை பட விழா | கேஸினோ  | டிசம்.12 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.45 மணி | THOU SHALT NOT KILL / SA UCIZI | DIR: CATALIN ROTARU, GABI VERGINIA SARGA | ROMANI | 2018 | 120'

அறுவை சிகிச்சை நிபுணரான கிறிஸ்டியன் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்தாலும் தொடர்ந்து நோயாளிகள் எதிர்பாராத விதமாக இறப்பது கிறிஸ்டியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை கண்டுபிடிப்பதற்காக களமிறங்கும் அவர், அதிர்ச்சிகரமான உண்மை ஒன்றை கண்டுபிடிக்கிறார். நோயாளிகளின் மரணங்களை கிறிஸ்டியனால் தடுக்க முடிந்ததா என்பதே ’தோ ஷால்ட் நாட் கில்’ படம்.

பகல் 12.15 மணி | CURIOSA / CURIOSA | DIR: LOU JEUNET | FRANCE | 2019 | 107'

1895-ம் ஆண்டு. பாரிஸில் பியர் என்னும் இளங்கவிஞன் இருந்தான். அவனும் சக நண்பனுமான ஹென்றியும் மேரி என்னும் அழகுப் பெண்ணைக் காதலித்தனர். நண்பர்கள் இருவரின் வழிகாட்டியும் க்யூபா கவிஞருமான ஜோஸ் மரியா டி ஹெரிடியாவின் மகள்தான் மேரி.

பியரை மேரி ஆத்மார்த்தமாகக் காதலிக்கிறாள். ஆனால் தந்தையின் கடனை அடைக்கவும் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர அப்பா விரும்பியதாலும் ஹென்றியைத் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனாலும் பியரை மறக்க முடியாமல் தவிக்கிறாள் மேரி. அல்ஜீரியா செல்லும் பியர், ஜோகர் என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். சிற்றின்ப புகைப்படக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இரண்டு வருடங்கள் கழித்து மேரி - பியர் சந்திப்பு நிகழ்கிறது...

பகல் 2.45 | HIER / TEGNAP | DIR: BALLNT KENYERES | HUNGARY, FRANCE NETHERLANDS, MOROCCO, SWEDEN, GERMANY | 2018 | 119'

மைய கதாபாத்திரமான, 50 வயதான விக்டர் கன்ஸ் உலகளவில் செயல்படும் ஒரு செழிப்பான 'கட்டிடம் மற்றும் சிவில் இன்ஜினியரிங்' நிறுவனத்தை நடத்துகிறார். அவர் பயணத்தை வெறுக்கக்கூடியவர் என்றாலும் வட ஆபிரிக்காவில் ஒரு கட்டிடத் தளத்தில் மிகவும் விலையுயர்ந்த சில சிக்கல்கள் ஏற்படுவதால் அவர் அங்கு செல்ல வேண்டிய நிலைமை. தன் மனதின் ஆழத்தில் கவனமாக புதைக்கப்பட்டுள்ள தனது இளமை நினைவுகளோடு தொடர்புடைய ஒரு நாட்டிற்குத்தான் அவர் செல்கிறார். அங்கு கடந்த காலமும் நிகழ்காலமும் பின்னிப்பிணைய, கடந்த கால அன்பின் திடீர் தோற்றம் அவரை ஒரு உலகத்திற்கு இட்டுச் செல்கிறது

மாலை 4.45 மணி: No Screening

மாலை 7.00 மணி: No Screening

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்