சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 20.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

By செய்திப்பிரிவு

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத்தில் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 10 மணி

The Tigers in the City / Tigre v meste / Juraj Krasnohorsky / Slovakia / 2012 / 90'

முப்பது வயதை எட்டிய மூன்று நண்பர்கள் கூடிக் குடித்து கொண்டாட்டமாய் கடந்த பாதை இப்போது பிடிப்பற்று போவதை உணர்கின்றனர். இனி வரும் நாட்களை உற்ற துணைவியுடன் கடக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். தன்னைத் தானே ஹைனா, பாட்ஜர், பீஜியன் என்று மிருகங்களின் பெயர்களை வைத்து அழைத்துக் கொள்ளும் இந்த மூவரின் செயல்கள் விசித்திரமானது தான்.

பெண்களை எளிதில் வசீகரிக்கும் திறன் கொண்டவன் ஹைனா. இவனினும் மற்றிருவர் திறம் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். வழக்கறிஞராக பணியாற்றி வரும் பாட்ஜர் வெகு நாட்களாக தான் ரேடியோவில் பேசி வந்த பெண்ணை முதல் முறையாக காணச் செல்கிறான்.வேடிக்கையாக இவனை நண்பர்களும் பின் தொடர அப்போது தான் பாட்ஜரை ஒருவன் கொல்லப் பார்ப்பது தெரியவருகிறது.

ஒரு வழக்கில் பாட்ஜர் ஒரு கொலையாளிக்கு எதிராக வாதாடுவதால், அக்கொலையாளி பாட்ஜர் உயிரை பறிக்கப் பார்ப்பதாக அறிகிறார்கள். மேலும், பாட்ஜரின் ரேடியோ காதலி அந்தக் கொலையாளியின் மனைவி என்றும் தெரிய வருகிறது. இந்த இடத்திலிருந்து திரைக்கதைக்கு பல முடிச்சுகள் கூடிக் கொண்டே போகின்றன.



மதியம் 12 மணி

Love battles/France/Jacques Doillon/99’/2013

ஒரு நவீன நாடக உடலசைவுகளோடு இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் இயங்குகின்றன. உடலால் மட்டும் பொருந்தக்கூடிய உறவு உணர்வாலும் பொருந்தி வராமல் தவிக்கிறார்கள். இதனால் ஒருவருக்கொருவர் விலகி நெருங்கி சண்டையிட்டு பின்னரே பொருந்துகிறார்கள். ஆனால் படிப்படியாக ஒவ்வொருவரின் தேவையும் இன்னொருவரை நோக்கி வேண்டிநிற்க, தங்களை உணர்கிறார்கள். மோதல் குறைந்து காதலாக முழுமை பெறுகிறது.



மதியம் 3 மணி

Madras | Dir.: Pa. Ranjith | Tamil|2014|158'| TC

வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவர். அதில் விளம்பரம் எழுத இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியும், அதனால் நடக்கும் கொலைகளும்தான் ‘மெட்ராஸ்’ படத்தின் மையம். இதனூடாக வடசென்னை மக்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறார் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித்.



மாலை 5 மணி

Kathai, Thiraikathi, Vasanam,Iyakkam | Dir.: R. Parthiban | Tamil|2014|128'| TC

‘கதையே இல்லாமல் ஒரு படம்’, சினிமாவின் நூற் றாண்டிற்கு சமர்ப்பணம் என்ற அறிவிப்புகளுடன் பார்த்தி பன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.’ சினிமா கனவைத் துரத் தும் இளைஞர்கள் தங்கள் முதல் படத்தை எடுப்பதற்காகக் கதை யைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படித் திரைக்கதையை உருவாக்கு கிறார்கள்? சொந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால் களைத் தாண்டி அவர்கள் சினிமா கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம்.



மாலை 7.30 மணி

The Ambassador to Bern/Hungary/Attila Szasz /76’/2014

1958களில் நடைபெறும் கதை. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பெர்ன் நகரத்தில் அமைந்திருந்த ஹங்கேரிய தூதரகத்தைத் தாக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. பெர்ன் தூதரகத்தில் உள்ள ஹங்கேரியன் தூதர் ஒரு நாள் காலை பதவியில் உள்ளவர்களை தூக்கிவிட்டு அங்கு வெளியாட்களை நியமிப்பது குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்.

சில நிமிடங்களிலேயே சுதந்திரப் போராளிகள் துப்பாக்கிகளோடு புயல்போல நுழைகிறார்கள். உள்ளே இருந்த ஹங்கேரிய தூதர் கொரோக்னாய் தனக்கு ஆபத்து வரும் அத்தகைய நிமிடங்களிலும் ஒருங்கிணைந்த ஹங்கேரிய அரசின் ரகசியங்களைக் காப்பதில் உறுதியாக இருக்கிறார். தீவிரவாதிகளான ஏபில் மற்றும் பானோஸ் ஆகிய இருவரும் ஹங்கேரியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள். அவர்கள் ஹங்கேரிய புரட்சிக்கு வெகுகாலமாய் போராடி வருபவர்கள். அவர்களை மனிதத் தன்மையோடு பணயக் கைதிகள் போலவே தூதரகத்தில் மறைத்துவைத்திருக்கிறார் தூதர் கொரோக்னாய்.

இதனால் தூதரகத்தின் வெளியே மற்ற கலகக்காரர்கள் கடுமையாக ஹங்கேரிய அரசு தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது என்று கோஷம் போடுகின்றனர். அதேநேரத்தில் ஹங்கேரிய குடியேற்றப் போராளிகள் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இழந்தபோது அவர்களைத் தாங்கிப்பிடித்துக்கொள்கிறார் ஹங்கேரிய தூதர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்