சென்னை பட விழா | பெலாஸோ | ஜன.5 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.5) பெலாஸோ அரங்கு 7-ல் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | KHOSHKSALI VA DOROUGH / DOUGHT & LIE | DIR: PEDRAM ALIZADEH | IRAN | 2016 | 94'

ஒமித் என்பவரின் பிறந்தநாள். அவரது மனைவி ஆலா மற்றும் ஆலாவின் சகோதரனும் ஒமித்தின் சிறந்த நண்பனுமான ஆராஷ்ஷும் கொண்டாடுகிறார்கள். மற்றும் அவனது தோழியும் ஒமித்தின் முதல்மனைவியுமான மித்ராவும் அழைக்கப்படுகிறார்கள். மித்ரா அப்போதுதான் கனடா நாட்டிலிருந்து திரும்பியிருந்தாள். அவனுடன் முக்கியமாக ஏதோ சொல்லவும் எண்ணியிருந்தாள். ஒமித் ஒரு வழக்கறிஞர், அவளை தனது அலுவலகத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்கிறான். ஆனால் ஆலாவுக்கு இதனால் உருவான கோபம் இன்னும் தணியவில்லை. சற்றே பின்னோக்கி செல்லும் ஒமித்தின் பழைய நினைவுகளில் விவாகரத்து செய்வதற்கு மித்ராவின் விரும்பத்தகாத நடவடிக்கைகளே காரணமாக அமைந்ததையும் யோசிக்கிறான். இறுதியாக ஒமித் ஒரு பெரிய முடிவெடுக்கிறான். ஈரானின் புகழ்பெற்ற ஒரு நாடகத்தை இத்திரைப்படம் தழுவியுள்ளது.

பகல் 12.00 | DISTINY / DESTINY | DIR: ZHANG WEI | CHINA | 2016 | 97'

ஆட்டிசம் என்ற மூளை வளர்ச்சிக் குறைபாடுடைய 9 வயது ஸீ பள்ளிக்குச் செல்ல விரும்புகிறான். ஆனால் வகுப்பறையில் சக மாணவர்களின் பெற்றோர் ஸீ-யைக் கண்டு அஞ்சி பள்ளியிலிருந்து அவன் வெளியேற்றப்பட வெண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 4-வது முறையாக ஸீ-தவறான நடத்தைக்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்ன். பள்ளி இயக்குநர் ஆட்டிச சிறுவனுக்கு உதவி புரிய விரும்புகிறார், ஆனால் மற்ற குழந்தைகளின் பெற்றோர் கொடுக்கும் நெருக்கடியால் அவரது கைகள் கட்டப்படப்படுகிறது. ஸீ-யின் தாயாரோ மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கும் பயன்கள், உரிமைகள் தன் மகனுக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடுகிறாள். இவளது சகோதரன் இதே ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட மற்றவர்களிடமிருந்து இவனைப் பிரித்து வைக்க விலங்கு போல் கூண்டில் அடைக்கப்பட்ட நினைவு வருகிறது. இதனையடுத்து ஸீ-யிற்கு இதிலிருந்து மீண்டு சகஜமான வாழ்வை நோக்கி அவனைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற போராட்ட குணம் ஏற்பட தன் மகனுக்காக அனைத்தையும் செய்கிறாள் தாய்.

மதியம் 2.30 FADO / FADO | DIR: JONAS ROTHLAENDER | GERMANY | 2016 | 100'

லிஸ்பன் நகரில் இருக்கும் தனது முன்னாள் காதலி டோரோவை சமாதானம் செய்ய இளம் டாக்டர் ஃபாபியன் லிஸ்பன் நகருக்கு செல்கிறான். இருவரும் மீண்டும் ஒருமுறை காதலிக்க ஆரம்பிக்க, இதற்கு முன்னால் வந்த பிரச்சினைகளே மீண்டும் வருகிறது. ஃபாபியனின் பொறாமைக் குணம் அவர்கள் உறவை சோதிக்க ஆரம்பிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்