சந்தோஷ் நாராயணனுக்கு ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது

By செய்திப்பிரிவு

சென்னை சர்வதேச திரைப்பட  விழாவில்  ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’விருது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது.

16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 13 ம் தேதி சென்னையில் தொடங்கி அதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொண்டு சிறந்த படங்களுக்கு பரிசுகளை அளித்தார்.

இந்த விழாவில் சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் ‘96’,‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’,‘ஜீனியஸ்’,‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’,‘மெர்குரி’,‘பரியேறும் பெருமாள் பிஏபிஎல்’,‘ராட்சசன்’,‘வடசென்னை’,‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது.

இதில் 'பரியேறும் பெருமாள்', '96'  ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.  விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படமும் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.  

‘வட சென்னை’ படத்தின் இயக்கத்துக்காவும்,  ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் தயாரிப்புக்காகவும்  இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

வணிகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்