கோவா பட விழாவுடன்  CIFF-ஐ ஒப்பிடுவது சரியா? - கண்ணன் பதில்

By செய்திப்பிரிவு

இனியன்

கோவா சர்வதேச திரைப்பட விழாவுடன் சென்னை திரைப்பட விழாவை ஒப்பிடுவது குறித்து ஐ.சி.ஏ.எஃப் தலைவர் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்த வருட திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படுள்ள விதம் குறித்து அவரிடம் கேட்டப்போது, "மொத்தமாக 149 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழில் போட்டிகளுக்கான பிரிவில் பெறப்பட்ட 20 படங்களிலிருந்து 12 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு நாட்டை ஆழ்ந்து நோக்கும் வகையில் பிரேசிலிலிருந்து 4 படங்கள்,  ஆஸ்திரலியாவிலிருந்து 2 படங்கள், ஜெர்மனியிலிருந்து ஒரு படமும் இடம்பெற்றுள்ளன.

இயக்குநரை ஆழ்ந்து நோக்கும் வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த பாதி-அலீமின் 6 படங்கள், ஆஸ்திரேலியாவில் நகைச்சுவை வகைமையில் 4 படங்களும், மத்திய அமெரிக்காவிலிருந்து 11 படங்களும், 11 தற்கால இந்திய திரைப்படங்கள் - அவற்றில் 7 கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, 4 ஐ.சி.ஏ.எப். குழுவால்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

77 தற்கால திரைப்படங்கள் உலக சினிமாவாக தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சாம்பியா நாட்டிலிருந்து ஒரு திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து சிறந்த சில படங்கள் 2 அல்லது மூன்று முறை திரையிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.  சிகப்பு கம்பள வரவேற்பில் 6 சர்வதேச திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

 சிறப்புத் திரைப்படமாக 'ரசூல் பூக்குட்டி' பற்றி அவர் திறைமையை கொண்டாடும் வகையில் அவரைப் பற்றிய ஒரு படம் திரையிடப்பட உள்ளது" என்றார்.

கோவா, திருவனந்தபுரம், மும்பை போன்ற சர்வதேசத் திரைப்பட விழாவுடன் சென்னை பட விழாவை ஒப்பிடுவது குறித்து கேட்டதற்கு, "கோவா திரைப்பட விழா போன்ற பல்வேறு விழாக்களை நம் விழாவோடு ஒப்பிட்டால், அவர்கள் ரூ.25 கோடியில் நடத்துகிறார்கள். நாமோ ஒரு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் சிறந்த திரைப்படங்களை நம் விழாவிற்கு சிரத்தையோடு சிரமப்பட்டு எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்