சென்னை பட விழா | அண்ணா | டிசம்.16 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.30 மணி | THE WILD PEAR TREE /  | DIR: NURI BILGE CEYLAN  | TURKEY | 2018 | 91'

எழுத்தாளராக கனவு காணும் சினான் தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறான். தனது படைப்பை பதிப்பிக்கத் தேவையான பணத்தைத் திரட்ட கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது தந்தை வைத்துவிட்டுப் போன கடன் பிரச்சினைகள் தொடர்கின்றன. கடன்களை அடைக்க சினான் முயற்சிக்கும் அதே நேரத்தில் தனது விதியும் தனது அப்பாவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை சினான் உணர்கிறான். த்ரி மங்கிஸ், ஒன்ஸ் டைம் ஆப் அனடோலியா, விண்டர் ஸ்லிப்ஸ் போன்ற படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற துருக்கிய இயக்குநர் நூரி பில்கே செலான் இயக்கியுள்ளார். கிராண்ட் பிரிக்ஸ், பாம் டி ஓர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம்.

படத்தின் ட்ரெய்லர்

The Wild Pear Tree

 

பகல் 12.00 மணி | THE WIND TURNS | DIR: BETTINA OBERLI | SWITZERLAND | 2018 | 88'

பாலின், ஓர் இளம் பெண் விவசாயி. இவர் நாகரிக உலகிலிருந்து ஒதுக்குப்புறத்தில் தனது கால்நடை பண்ணையை உருவாக்கி வைத்திருக்கிறார். சுற்றுப்புறச் சூழலின் அமைதியோடு தனது கணவர் அலெக்ஸூடன் நல்ல நெறிமுறையிலான வாழ்க்கையை அப்பெண் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அப்பகுதியில் காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. காற்றாடியை நிறுவ வருகிறார் சாமுவேல். அந்த வேளையில்தான் பாலினின் நன்மதிப்புகளும் அவள் அலெக்ஸ் மீது கொண்டுள்ள காதலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. லோகார்னோ சர்வதேச திரைவிழாவில் விருதுபெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.30 மணி | PANNIC ATTACK | DIR: PAWEL MASLONA | POLAND | 2017 | 85'

சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல்களில் சிக்கும்போது நிகழும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை. அப்படி ஆறு நபர்களின் கதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஒரு ரகம். ரங்க ராட்டினமாய் சுழன்றடிக்கும் ஆறு கதைகள். ஓரிரவில் தன் இரு முன்னாள் காதலர்களைச் சந்திக்கும் ஒருத்தி, விமானத்தில் மோசமான இருக்கைகளாலும், உடன் பயணிப்பவராலும் அவஸ்தைப்படும் ஒரு ஜோடி, தன்னை ஒரு நீலப்பட நாயகியாக தோழி வெளிக்காட்டிடுவாளோ என்ற பயத்தில் உறைந்திருக்கும் ஒரு சிறுமி, தன் கல்யாணத்தின் போது, பிரசவ வலி வந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் மணப்பெண் என வெவ்வேறு பின்புலத்தில் வெவ்வேறு மனிதர்களின் கதையை நகைச்சுவையும் சுவாரஸ்யமும் குறையாமல் தந்திருக்கிறார்கள். படத்தொகுபபுக்காகவும், கலகல காட்சிகளுக்காகவும் பயமின்றி பார்க்கலாம் பேனிக் அட்டாக்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.30 மணி | STEFAN ZWIG - FAREWELL TO EUROPE | DIR: MARIA SCHRADER  | GERMANY | 2018 | 100'

தி ராயல் கேம், அமோக், லெட்டர் ஃபிரம் அன்நோன் வுமன், கன்பெஷன் போன்ற புகழ்பெற்ற நாவல்களை தீட்டியவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல யூத எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வெக். ஐரோப்பாவில் போர் மேகம் சூழ்ந்து நாஜிக்கள் கை ஓங்கும் நிலையில் அடைக்கலம் தேடி புதிய இடத்தை தேடும் அவரது பயணத்தை இத்திரைப்படம் பேசுகிறது. இப்படத்தின் உண்மைத்தன்மை ஒளிரும் திரைக்கதை பார்வையாளர்களை கட்டிப்போடக் கூடியது. ஜெர்மன் சார்பாக ஆஸ்கருக்கு சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.

படத்தின் ட்ரெய்லர்

Farewell to Europe

 

மாலை 7.15 | NINA | DIR: OLAGA CHAJDAS  | POLAND | 2018 | 130'

இருபது ஆண்டுகள் கடந்த பிறகும் கூட வோஜ்டெக்கை திருமணம் செய்துகொண்ட நினாவின் வாழ்க்கை மேலும் நகராமல் அப்படியே நிற்கிறது. காரணம் குழந்தையின்மை. ஒவ்வொருமுறையும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவர்கள் மக்டா என்ற பெண்மணியைச் சந்திக்கும்போது தங்கள் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்கும்படி கேட்கிறார்கள். மாக்டாவின் சம்மதமும் கிடைத்துவிட இப்போது நினாவின் வாழ்க்கையில் புதுவிதமான சிக்கல்கள். காரணம் இப்போது மாக்டாவின் கவர்ச்சியில் நினா
விழுகிறாள்.

படத்தின் ட்ரெய்லர்

Nina

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்