சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.16 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 9.45 மணி | THE HARVESTERS  | DIR: ETIENNE KALLOS  | SOUTH AFRICA | 2018 | 102'

தென் ஆப்பிரிக்காவின் பழமைவாதம் நிறைந்த தனித்துவிடப்பட்ட ஒரு பகுதியில்தான் ஹீரோ ஜானோ வசிக்கிறார். ஜானோ வித்தியாசமானவர். ரகசியங்கள் நிறைந்தவர். உணர்ச்சிவசப்படக் கூடியவர். ஒரு நாள் அவரது தாய் பீட்டர் என்ற ஆதரவற்ற தெருவோரக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அன்றிலிருந்து தொடங்குகிறது ஜானோ - பீட்டருக்கு இடையேயான யுத்தம். ஜானோ பதவிக்காகவும் பாரம்பரியத்துக்காகவும் பெற்றோர் பாசத்துக்காகவும் போராடுகிறார். பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட படம்.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.15 மணி | PITY | DIR: BABIS MAKRIDIS | GREECE  | 2017 | 86'

தான் மகிழ்ச்சியற்று இருப்பதுதான் தனது மகிழ்ச்சியே என்று உணரும் ஒரு விசித்திர குணாம்சம் கொண்ட மனிதனின் கதை இது. துயரத்துக்கு அடிமையானவர் இந்த கதாபாத்திரம் தன் மீது பிறர் இரக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, பிறர் தன் மீது பரிதாபப்பட வேண்டும் என்பதற்காகவே பல வேலைகளைச் செய்யக் கூடியவர். கொடூரமல்லாத ஒரு உலகத்தில் கொடூரங்களையும் துயரத்தையும் பரிதாபத்தையும் விரும்பும் ஒரு விசித்திர மனிதனின் கதை இது.

பிற்பகல் 2.45 மணி | WHEN THE TREES FALL | DIR: KOLY PADAYUT DEREVA  | UKRINE | 2018 | 96'

பதின்ம வயதுப் பெண் லாரிசாவின் காதலன் ஸ்கார் ஒரு இளம் குற்றவாளி. ஸ்காரை காதலிப்பதால் லாரிசாவை ஒதுக்கி வைக்கிறது அவளது கிராமம். லாரிசாவின் பாட்டி மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து, இளம் வயதில் தனது காதலனைப் பிரிந்தவள். லாரிசாவின் அம்மாவுக்கு தனது மகளை ஆதரிக்கும் அளவுக்கு மன வலிமை இல்லை. லாரிசாவும், ஸ்காரும் தங்களைச் சுற்றியிருக்கும் நிழலுலக வாழ்க்கை, துக்கம், தங்கள் உறவினர்கள் என அனைவரையும் விட்டு தப்பிச் செல்ல நினைக்கின்றனர். அவர்கள் சுதந்திரத்துக்கான விலை என்ன? ஒடேசா திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்காக விருது பெற்ற படம். 2 விருதுகள் 7 பரிந்துரைகளைப் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.45 மணி | NIGHTS COMES ON | DIR: JORDANA SPIRO  | USA | 2018 | 86'

18 வயதான ஏஞ்சல், சிறார் தடுப்புக்காவலிலிருந்து வருகிறாள். ஏஞ்சலின் திட்டம் எளிமையானது. குழந்தைகள் பராமரிப்பில் இருக்கும் தனது தங்கையை அழைத்துக் கொள்வது, ஒரு துப்பாக்கியை வாங்குவது, தனது அம்மாவை கொலை செய்த தந்தையை பழிவாங்குவது, இழந்த வாழ்க்கையை மீட்பது. சூடான்ஸ் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழா விருதுகளைப் பெற்ற படம்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 7.00 மணி | KILLING JESUS | DIR: LAURA MORA ORTEGA  | COLOMBIA | 2017 | 95'

பல்கலைக்கழகப் பேராசிரியான தனது தந்தை கண் முன்னாலேயே கொல்லப்படுவதைப் பார்க்கிறாள் லிட்டா. மனம் வெதும்பிய லிட்டா, காவல்துறையில் புகார் கொடுக்கிறாள். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் லிட்டா குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை. அவளாகவே கொலையாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறாள். கொலை செய்தவனுடன் நட்பு கொள்கிறாள். நம்பிக்கையானவளாக மாறுகிறாள் லிட்டா. கொலையாளியை லிட்டா பழிவாங்கினாளா?  91வது ஆஸ்கர் அகாடமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட படம் இது.

படத்தின் ட்ரெய்லர்

KILLING JESUS

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்