சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.14 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

காலை 10.45 மணி | BAZODEE / TODD KESSLER  | DIR: NOOR IMRAN MITHU  | TRINIDAD AND TOBAGO | 2016 | 101'

இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய வியாபாரி, மீளாக் கடன் தொல்லையில் இருக்கும் பஞ்சௌரியின் மகள் அனிதா. தனது விருப்பத்தோடு, பணக்கார மணமகன் ஒருவனை திருமணம் செய்யவிருக்கிறாள். அப்போது பாடகன் லீ டே லியானை சந்திக்கிறாள். கண்டதும் காதல் வசப்படுகிறாள். அனிதாவின் பார்வை செல்லும் திசை அவளது எதிர்காலக் கணவனின் இளம் சகோதரனுக்குத் தெரியவருகிறது. அவன் அனிதாவைப் பழிவாங்க திட்டமிடுகிறான்.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 1.00 மணி | HIGH FLASH / SURVIVING HAI | DIR: CHING SHEN CHUANG | TAIWAN  | 2018 | 110'

ஒரு கடற்கரை நகரம். அங்கே ஒரு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைக்கு எதிராக ஒரு போராட்ட இயக்கம் தொடங்குகிறது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த அஹ்-ஹாய் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்கிறார். அச்செய்தி ஊடகங்களில் பரவுகிறது. அஹ்-ஹாய் தியாகியாகிறார். அஹ்-ஹாயைப் பரிசோதிக்கும் சாவ், அது தற்கொலை எனத் தீர்மானிக்கிறார். அந்த ஊரில் உள்ள ஒரு அரசாங்க வக்கீலுடன் இணைந்து சாவ் விசாரணையில் ஈடுபடுகிறார். அப்போதுதான், சாவ் ஒரு அதிர்ச்சி தரும் சதியைத் தெரிந்து கொள்கிறார். இந்த புரிதல் அவரை அபாயகரமானவர்கள் முன் நிறுத்துகிறது.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 3.30 மணி | THE SONGS OF SILENCE / KEDARA | DIR: INDRAADIP DASGUPTA  | BENGALI | 2018 | 108'

பாழடைந்த மூதாதையர் வீட்டில் வாழ்ந்து வரும் ஒரு அற்ப மனிதன் நரசிங்காவின் கதை இது. மனைவியைப் பிரிந்து, தனிமையில் வாழ்ந்து வருகிறான். அக்கம்பக்கத்தினரும் நரசிங்காவை நிந்திக்கின்றனர். நரசிங்கா, ventriloquism எனப்படும் மாயக்குரல் வித்தை தெரிந்தவன். அவனது கலைக்கான முக்கியத்துவம் குறைந்தபோது அவனது வருமானம் குறைந்தது. கடந்த கால மனிதர்களுடன், கற்பனையான உரையாடல் செய்து பொழுதுபோக்குகிறான் நரசிங்கா. இதோடு, இவனது கற்பனையில் வரும் விருந்தாளிகள் பேசுவது போல குரல் மாற்றிப் பேசிக் கொள்கிறான். கேஷ்டோ எனும் பழைய பொருள் விற்பவன், நரசிங்காவுக்கு ஒரு கை வைத்த நாற்காலியைத் தரும் தருணத்திலிருந்து கதை புதிய திருப்பத்தைக் காண்கிறது. அந்த நாற்காலி நரசிங்காவின் குணத்தை மாற்றி அவனுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுகிறது. ஆனால் அவனது இந்த மாற்றத்துக்கான விலையாக, மதிகெட்டுப் போகிறான். தொடர்ந்து சில அசம்பாவிதங்களும், எதிர்பாராத சம்பவங்களும் நடக்கின்றன.

மாலை 5.30 மணி | THE REPORTS ON SARAH AND SALEEM | DIR: MUAYAD ALAYAN  | PALESTINE | 2018 | 127'

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஆண் - இஸ்ரேலைச் சேர்ந்த பெண் இருவருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்படுகிறது. பல்லாண்டுகளாக இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே எல்லை பிரச்சினை உள்ளிட்டவை இருப்பதால், இவர்களின் காதலும், நட்பும் பல்வேறு அரசியல் நெருக்கடிகளைச் சந்திக்கிறது. இதனால், இருவரும் உடல் - மன ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் நிலவும் வரலாற்று பிரச்சினையால், மனிதர்களிடையே நிகழும் மிக சாதாரணமான உணர்வுகள் கூட எப்படி நெருக்கடிக்கு உள்ளாகிறது என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறது இப்படம்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 7.30 மணி | ASAKO I & II | DIR: RYUSUKE HAMAGUCHI  | JAPAN  | 2018 | 119'

இளம்பெண் ஒருவர், சுதந்திரமாக சுற்றித்திரியும் இளைஞரிடம் காதல் வயப்படுகிறாள். இருவரும் சிறிது காலத்திற்கு காதலித்து நெருக்கமாக இருக்கின்றனர். ஒருநாள் அந்த இளைஞன் அவளைவிட்டு மாயமாகி விடுகிறான். அதன்பின், அப்பெண் வேறொரு இடத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தான் ஏற்கெனவே காதலித்த இளைஞனை போன்ற தோற்றம் கொண்ட வேறொரு இளைஞனை காண்கிறாள். ஆனால், அந்த இளைஞன் அப்பெண் ஏற்கெனவே காதலித்த இளைஞனுடன் முற்றிலுமாக வேறுபட்ட குணநலன்களை கொண்டிருக்கிறான். அதன்பிறகு, அவர்கள் இருவரும் காதலித்தார்களா, மாயமான அந்த இளைஞன் என்ன ஆனான் என்பதை காதலும், அன்புமாக கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ட்ரெய்லர்

Asako (I & II)

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்