சென்னை பட விழா | தேவி | டிசம்.18 | படக்குறிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை (டிசம்.18) தேவி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.00 மணி | AMERIKA SQUARE / PLATEIAMARIKIS | DIR: YANNIS SAKARIDIS | GREEK / ENGLISH | 2017 | 86'

டாட்டூ வரைகலைஞன் பில்லி மற்றும் வேலை கிடைக்காத நகோஸ் இருவரும் சிறந்த நண்பர்கள். வயதான பிரம்மச்சாரியான நகோஸ் நிறவேறுபாடு பார்ப்பவர், அதேநேரத்தில் அன்பானவர் மற்றும் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவரும்கூட. கிரேக்கத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்காக கோபப்படுபவர். ஆனால் பில்லி வெளிநாட்டினரின் வருகையை விரும்புபவர். சிரிய அகதியான டாரெக்கை பார்க்கவேண்டி இருவரும் ஏதென்ஸில் உள்ள அமெரிக்க சதுக்கத்தில் சந்திக்கின்றனர்.

பிற்பகல் 2.00 மணி | THE NET / GEUMUL | DIR: KI-DUK KIM | KOREAN | 2017 | 114'

நாம்சுல்வூ ஓர் ஏழை மீனவர், இரண்டு கொரியாக்களை பிரிக்கும் நதியின் வடக்கே அவரது மனைவி மற்றும் மகள் ஒரு மகிழ்ச்சியான எளிய வாழ்க்கை வாழ்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் ஆற்றில் மீன்பிடிக்க செல்கிறார், நதிநீரில் சிறுதூரம் வரை மட்டுமேசென்று மீன்பிடிப்பது அவரது வழக்கம். அங்கு உள்ள கண்ணுக்கு தெரியாத எல்லையை அம்மீனவர் கடக்க மாட்டார் என்பது அங்குள்ள எல்லைப்பகுதி ராணுவத்தினரின் நம்பிக்கை. ஏனெனில் அவரை அவர்கள் நீண்டநாட்களாக கவனித்து வருகின்றனர். அதனால் அவருக்கு தொல்லைகள் தரமாட்டார்கள்.. ஆனால் ஒருநாள் அவரது மீன்பிடி படகு இயந்திரத்தில் ஒரு வலை சிக்கிக் கொள்கிறது. இதனால் படகு தெற்கு நோக்கி தானே வேகமாக நகர்வதை அவரால்கூட தடுக்கமுடியாத நிலை. அதன்பிறகு நிலைமை எக்கச்சக்கமாக போய்விடுகிறது. நாம்சுல்வூ எதிர்கொள்ளும் பாதுகாப்புத் துறையினரின் விசாரணைகள் யாவும் பொதுவாக மீனவர்கள் எல்லையைக் கடந்ததாக தண்டனைக்குள்ளாகும் மோசமான நிலையை யோசிக்க வைக்கிறது.

மாலை 4.30 மணி | WILD | DIR: NICOLETTE KREBITZ | GERMAN | 2016 | 97'

புரட்சிகரமான இளம் பெண் ஒருத்தியின் பயணம் இது. கடும் குளிர் படர்ந்த நாளில் ஓநாய் ஒன்றை சந்திப்பதால் அனியாவின் வாழ்க்கையே மாறுகிறது. அந்த ஓநாயின் மீதான இனம் புரியாத ஈடுபாடு அவளை சமூக நெறிகளை தாண்டி பல செயல்களை செய்ய வைக்கிறது. பொருளாசை பிடித்த உலகம், பாலியல் தேவைகளுக்கு ஆண்களை சார்ந்திருக்கும் பெண்கள், நகர வாழ்க்கையின் மந்த கதி என இந்த உலகின் பிடியிலிருந்து அவள் மீள நினைக்கிறாள்.

மாலை 7.00 மணி | AMOK / AMOK | DIR: KASIA ADAMIK | POLICH | 2017 | 108'

ஒரு மனிதன் கொலை செய்யப்படுகிறான், ஆனால் அதற்கு பொறுப்புள்ளவன் தட்டிக்கழிக்க, உண்மை கண்டுபிடிக்கப்பட்டு அவன் கைது செய்யப்படுகிறான். ஒரு சில ஆண்டுகள் கழித்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் "அமோக்" என்ற தலைப்பில் ஒரு புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தில் சான்றுகள் கண்டுபிடிக்க சந்தேகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

54 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்