CIFF-ல் டிசம்பர் 16 அன்று என்ன படம் பார்க்கலாம்? - அப்துல் முத்தலீஃப் பரிந்துரைகள்

By மு.அப்துல் முத்தலீஃப்

BALLAD FROM TIBET / TIAN LAI MENG XIANG | CHINA அண்ணா, பிற்பகல் 2.30 மணி

திபெத்திய குழந்தைகள் சிலர் ஒவ்வொருவரும் தங்கள் வேறுபட்ட காரணங்களுக்காக ஒடிசி நடனம் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். துப்டென், ஒரு கண்மூலம் நன்றாக பார்க்க முடிகிறது. இன்னொரு கண் முற்றிலும் செயலிழந்து, அவரது வாழ்க்கை முற்றிலும் இருண்டுவிடுவதற்குள் உலகை நன்றாக பார்த்துவிட வேண்டும் என்று விரும்புகிறார். ட்ரோமா, ஒரு அழகான நெசவு குடும்பத்துப் பெண். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டப்படும் துணிநெய்யும் வேகத்தைவிட தான் இன்னும் வேகமாக நெய்ய முடியும் என்று அவள் தனது பாட்டிக்கு நிரூபிக்க விரும்புகிறாள். சோனம் ஒரு கண்தெரியாத மசாஜ் பணியாளர் தனது சலிப்புமிக்க வேலையை கைவிட விரும்புபவர். அவர்களில் மிகவும் இளையவர் கால்சாங், மற்றவர்களைப் பின்பற்றி மோசமாகப் பாடுபவன். நாடோடி குடும்பத்திற்கு உதவும்பொருட்டு பைக் ஓட்டுபவர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள், பேண்ட் கலைஞர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் இலக்கு டிவி நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் பாடல் போய் சேர வேண்டும் என்பதுதான். வாழ்க்கையின் ஒளியைத் தேடும் குழந்தைகளுக்கு நம்பிக்கையைத் தரும் படம்.

BLOODY MILK / PETIT PAYASAN| FRENCH கேஸினோ, பகல் 12.15 மணி

பியர், ஒரு முப்பத்தி ஐந்து வயதான விவசாயி, அவரது பெற்றோர் நடத்திக்கொண்டிருந்த பால்பண்ணையை எடுத்து நடத்துகிறார். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் அவரது பசுக்களுடன்தன் தன் நேரத்தை அர்ப்பணிக்கிறார். திடீரென ஒரு தொற்றுநோயினால் மாடுகள் தாக்கப்பட்டுவிட்ட்தாக உணர்கிறார். மந்தை முழுவதுமே அவருக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன. இதனால் மனக்கவலையோடு அவற்றை கவனிக்கத் தொடங்குகிறார். அவரது சகோதரி பாஸ்கேல், கால்நடை மருத்துவரான அவரது சகோதரி பாஸ்கேல், ''எல்லா மாடுகளும் நன்றாகவே உள்ளன. தேவையற்ற கவலைகளை விட்டுவிடு'' என ஆறுதல் அளிக்கிறார். துரதிஷ்டவசமாக, ஒரு மாடு தொற்றில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. பியருக்கு இந்த அச்சம் மேலும் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு மாட்டுக்கு தொற்றுநோய் வந்தாலும் மொத்த மந்தையையும் வெட்ட வேண்டும். ஆனால் பியர் பிரச்சனையை, அதுவரை போகவிடவில்லை.

HEARTSTONE / HJARTASTEINN |ICELANDIC | கேஸினோ, பிற்பகல் 2.45 மணி

ஐஸ்லாந்தில் ஒரு தொலைதூர மீன்பிடி கிராமம். டீனேஜ் பையன்கள் தோர் மற்றும் கிறிஸ்டியன் அனுபவத்தில் ஒரு கொந்தளிப்பான கோடைக் காலம், ஒரு பெண்ணின் இதயத்தை வென்றெடுக்க முயற்சிக்கும் போது, மற்றவர் தனது சிறந்த நண்பருடன் புதிய உணர்ச்சிகளைக் கண்டுபிடிக்கிறார். கோடை முடிவடைய நேரம் வருகிறது. ஐஸ்லாந்தின் கடுமையான குளிர் உருவாவதற்கான தட்பவெட்பநிலையில் ஐஸ்லாந்தின் இயற்கைச் சூழல் சற்றே மாறத் தொடங்குகிறது. அந்த பருவமாற்றத்தின்போது, இந்த பையன்கள் அந்த விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறவும், முதிர்ச்சியை எதிர்கொள்ளவுமான காலமாக அமைகிறது.

SUCH IS LIFE IN THE TROPICS / SIN MUERTORS NO HAY CAMAVAL | ECUADOR | தேவிபாலா, காலை 11.15 மணி

ஒவ்வொன்றுமே தவறான துப்பாக்கிக் குண்டுகளால்தான் தொடங்குகிறது. தந்தையிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற நிலத்தில் வசிக்கும் 250 குடும்பங்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டுமென்று நினைக்கிறான் அந்த பணக்கார இளைஞன். இரத்தம் இல்லாமல் வெளியேற்றப்படாது என்று தெரிந்தும் அம்மலையின் செட்டில்மெண்ட் பகுதித் தலைவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளார். துரோகத்தைச் சந்திக்கும் அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். இத்திரைப்படம் அனைத்து சமூகத்தின் மூலமும் காயாகுயில் நகரத்தை சித்தரித்துக் காட்டுகிறது. அங்கு மோசமான சூழ்நிலை உருவாகிய நிலையில் மிகப்பெரிய வன்முறைக்குப் பிறகு நிலைமை சீரடைகிறது.

CENTAUR / DIE FLUGEL DER MENSCHEN | KIRGHIZ | தேவி, பிற்பகல் 2.00 மணி

செண்டார் ஒரு அமைதியான, சிறிய மற்றும் எளிமையான மனிதர், ஒரு சிறிய பையனின் அன்பான தந்தை ஒரு வார்த்தை மற்றும் வாய்பேச மற்றும் செவிகேளா மாரிபா எனும் இளம் பெண்ணின் கணவராக ஒரு வார்த்தையும் பேசியதில்லை. இவர்கள் அன்புடன் இணைந்து சிறிய வாழ்க்கையை அந்த சின்னஞ்சிறிய கிர்கிஸ்தான் கிராமத்தில் நடத்துகின்றனர். செண்டார் தனது அண்டைவீட்டார்கள் மத்தியிலே மிகவும் மரியாதை மிக்கவனாக விளங்குகிறார். எவரும் சந்தேகப்படாத வகையில் ஒரு குதிரைத் திருடனாகவும் அவர் இருக்கிறார். அதேநேரத்தில் கிர்கிஸ்தான் நாடோடிப் பழங்குடியினரிடையே குதிரைகள் சார்ந்து அவருக்குள் ஆழமாக வேரூன்றிய நம்பிக்கை ஒன்று இருக்கிறது. பொய் நீண்டநாள் நீடிக்கவில்லை. ஒருநாள் அவரைப் பற்றிய உண்மை வெளிப்படும்போது அவர் தனது குடும்பத்தின் விதியை நிர்ணயிக்கும் தேவையை உணர்வது அவர் மட்டுமல்ல அந்தக் கிராம வாசிகளும்.

BEAUTY AND THE DOGS / AALA KAFIFRIT | DIR: KAUTHER BEN HANIA | TUNISIAN | தேவி, பிற்பகல் 4.30 மணி

main content - BEAUTY AND THE DOGS100 

மரியம் ஓர் இளம் துனிசியன் மாணவி. ஒரு பூவைப் போன்ற அழகு மிக்கவள். ஒருநாள் மின்னும் விளக்குகளில் டிஸ்கோ நடனம் ஆடவேண்டுமென்று விரும்புகிறாள். அங்கே யூசுப் என்பவனைச் சந்திக்கிறாள். ஆனால் அன்றைய அவளது வாழ்க்கையில் ஏதோ ஒன்று அவள் றெக்கைகளை உடைக்கிறது. நைட்கிளப்புக்கு வெளியே யூசுப் என்பவனோடு பேசிக்கொண்டிருக்கையில் மூன்று போலீஸ்காரர்கள் அவளை கடற்கரையில் சந்திக்கிறார்கள். ஒரு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும்போது, அவர்கள் யூசுஃப்பிடமிருந்து பணம் பறித்துக்கொண்டு மறியத்தை கற்பழித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். மயக்கமும் வலியும் இருந்தபோதிலும் தன் உடலிலுள்ள கற்பழித்த கறைகளையே சான்றுகளாக்கி அது மறைவதற்குள் போய் அதிகார துஷ்பிரயோகம் செய்த அவர்கள் மீது புகாரை பதிவு செய்துவிட விரும்புகிறாள். அதில் அவள் பிடிவாதமாக இருக்கிறாள். அவளது விடாமுயற்சிக்கு உரிய நீதியை நோக்கி சட்டப்பூர்வமான வழக்காக அது மாறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

43 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்