உலக பணக்காரர் பட்டியல்: மீண்டும் முதலிடத்தில் ஜெஃப் பிஸோஸ்

By செய்திப்பிரிவு

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை மீண்டும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் இடம்பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட நபராக ஜெஃப் உருவாகியுள்ளார்.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள்படி, அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 சதவீதம் உயர்ந்ததால் ஜெஃப் பிஸோஸ் சொத்து மதிப்பு 90 கோடி டாலர் அதிகரித்து 9060 கோடி டாலராக உள்ளது. அதிக சொத்து மதிப்பில் இதுவரை முதலிடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 9010 கோடி டாலராக இருக்கிறது.

பில்கேட்ஸை தாண்டி முதலிடத்தை ஜெஃப் பிஸோஸ் பிடித்தது இது முதல் முறையல்ல, ஜூலை மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளிவந்தபோது அதன் பங்குவிலை ஏற்றம் கண்டது. அப்போது சொத்து மதிப்பு 9090 கோடி டாலராக இருந்தது. பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 9070 கோடி டாலராக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்னரே வாரன் பஃபெட், அமன்சியோ ஒர்டெகோ போன்றோரை பின்னுக்குத் தள்ளி பிஸோஸ் உலகின் இரண்டாவது பணக்காரராக இடம் பிடித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பெரிய சந்தையை வைத்துள்ள சவுக் டாட் காம் (souq.com) நிறுவனத்தை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரத்தில் அமேசான் அறிவித்தது. இதனால் இதன் பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் மட்டும் ஜெஃப் சொத்து மதிப்பு 1020 கோடி டாலர் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.

முதன் முதலில் போர்ப்ஸ் 400 தொழிலதிபர்கள் பட்டியலில் 1998-ம் ஆண்டில் ஜெஃப் இடம்பிடித்தார். அதன் பின்னர் அமேசான் பொதுப்பங்கு வெளியிட்டபோது அவரது சொத்து மதிப்பு 160 கோடி டாலராக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

55 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்