மே 12, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 12) சவரனுக்கு ரூ.296 குறைந்து, ரூ.45,640-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் மே.3 ஆம் தேதி அதிரடியாக ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து மறுநாள் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.5,705-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,440 -க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை 3.30 காசுகள் குறைந்து ரூ.78.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,700-ஆக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்