பணமதிப்பு நீக்கம் காரணமாகவே ஜிடிபி வளர்ச்சி சரிவு: கவுசிக் பாசு கருத்து

By செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு இந்தியா மிகப் பெரிய விலை கொடுத்துள்ளது என்று பொருளாதார அறிஞர் கவுசிக் பாசு கூறியுள்ளார். மேலும் இந்திய ஜிடிபி வளர்ச்சி கவலையளிப்பதாகவும் கூறினார். உலக வங்கியின் முன் னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கவுசிக் பாசு இது தொடர்பாக பேசுகையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிந்து வருவது மிகவும் கவலையளிக்கும் விஷயம். முக்கியமாக பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு இந்தியா கொடுத்துள்ள மிகப் பெரிய விலை இது என்றார்.

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி ஏப்ரல்-ஜுன் காலாண்டில் 5.7 சதவீதமாக இருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் உற்பத்தி துறையில் மூன்றாவது காலாண்டாக பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியா பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் உருவாகும். ஜிடிபி வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்று கணித்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விடவும் 5.7 சதவீத வளர்ச்சி என்பது மிகவும் குறைவானது. குறைவான வளர்ச்சி விகிதம் மிகவும் கவலையளிக்கிறது.

2003-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இந்திய ஜிடிபி வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதமாக இருந்தது என்றும் பாசு சுட்டிக் காட்டினார். 2008-ம் ஆண்டு சர்வதேச பொருளாதார தேக்க நிலையில் போது இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக குறைந்தது. ஆனாலும் 8 சதவீத வளர்ச்சி என்பது இந்தியாவுக்கு நிலையான வளர்ச்சியாக உருவானது.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, சீனாவிடமிருந்து சந்தை வாய்ப்புகள் இந்தியாவுக்கு வந்துள்ளது போன்ற காரணங்களால் 8 % பொருளா தார வளர்ச்சியை இந்தியா அடை ந்திருக்க வேண்டும். ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஏற்றுமதி துறையில் போதிய வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால் ஒட்டு மொத்த வளர்ச்சியும் பாதிப்படைந்துள்ளது. பணமதிப்பு நீக்கம் போன்ற இன்னொரு மிகப்பெரிய தவறு செய்யாத பட்சத்தில் 2018-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அடுத்த இரு காலாண்டுகளுக்கு வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும் என்று பாசு தெரிவித்தார். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

27 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

29 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்