வாழும் தொழிலதிபர்களின் சிறப்புப் பட்டியலில் ரத்தன் டாடா, லட்சுமி மிட்டல், வினோத் கோஸ்லா: ஃபோர்ப்ஸ் வெளியீடு

By செய்திப்பிரிவு

உலகெங்கிலும் வாழும் மிகச் சிறந்த தொழிலதிபர்கள் பட்டியலில் ரத்தன் டாடா, லட்சுமி மிட்டல், வினோத் கோஸ்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிகச் சிறந்த தொழில் மூளையைக்கொண்ட 100 பேர் பட்டியலை ஃபோர்ப்ஸ் தொகுத்து வெளியிட்டுள்ளது.

டாடா குழுமத்தின் கவுரவத் தலைவரான (எமிரேடஸ்) ரத்தன் டாடா, ஆர்சிலார் மிட்டல் நிறுவனத் தலைவரான லட்சுமி மிட்டல், சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் வினோத் கோஸ்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்புப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இடம்பிடித்துள்ளார். மிகச் சிறந்த விற்பனையாளர், சிறந்த தொழில் நிர்வாகி, நிறுவன உரிமையாளர் என்ற வகையில் அமெரிக்காவின் 45-வது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பியோஸ், வர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்டு பிரான்சன், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன தலைமைச் செயல் அதிகாரி வாரன் பஃபெட், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் செயல் தலைவர் ரூபர்ட் முர்டாக் ஆகியோரும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் நூற்றாண்டு இதழின் தகவல் களஞ்சியமாக 100 தொழில்முனைவோர், தொழில் துறை தொலை நோக்கர்கள், முதலாளித்துவத்தின் சொந்தக்காரர்கள் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் தொகுத்துள்ளது. தொழில்துறையில் புத்தாக்க சிந்தனையால் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இந்த இதழில் அடையாளப்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் பிசி ஃபோர்ப்ஸ், வால்டர் டிரே ஆகியோரால் செப்டம்பர் 17, 1917-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் தொடங்கப்பட்டது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்