சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 15) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.முந்தைய வாரங்களில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை நேற்று 43 ஆயிரத்தைத் தொட்டிருந்தது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5,380-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040 -க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,648 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.72,500-ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
19 mins ago
சுற்றுச்சூழல்
25 mins ago
தமிழகம்
35 mins ago
சினிமா
41 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
55 mins ago
சினிமா
59 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago