தொழிலதிபர் விஜய் மல்லையாவை விரைவாக ஒப்படைக்க இந்தியா கோரிக்கை

By செய்திப்பிரிவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை விரைவில் ஒப்படைக்கு மாறு இந்தியா கோரியிருக்கிறது. மல்லையாவை ஒப்படைக்குமாறு இங்கிலாந்து உள்துறைச் செய லாளர் பேட்ஸி வில்கின்சனிடம் மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹரிஷி தெரிவித்தார். இருவருக்கும் இடையே 2 மணி நேரத்துக்கும் மேல் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் மல்லையா விவ காரம், எல்லை தாண்டிய தீவிர வாதம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்தியாவுக்கும் இங்கிலாந் துக்கும் இடையே நாட்டு பிரஜை களை ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1992-ம் ஆண்டு கையெழுத்தானது. ஆனால் இதுவரை ஒருவர் மட் டுமே இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார். கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக சமிர்பாய் வினுபாய் படேல் என்னும் நபர் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டார். மல்லையாவை போல் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லாமல் படேல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மல்லையாவை இந்தியா அனுப்பி வைக்க இந்தியா முறையான கடிதத்தை கடந்த பிப்ரவரி 8-ம் தேதி கொடுத்தது. மல்லை யாவை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான சட்ட உதவி களை இந்தியா செய்யும் என்றும் உள்துறை செயலாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்