2023ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக குறையும்: சர்வதேச நிதியம் கணிப்பு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: 2023 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. ஐஎம்எஃப் என சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நிதியம் உலகப் பொருளாதார தற்சமய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அந்த அறிக்கையின்படி, 2023 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் மற்றும் சர்வதேச பொருளாதாரம் தற்போதைய நிலையிலிருந்து 2.9 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆசிய கண்டத்தில் 2023 மற்றும் 2024ல் பொருளாதார வளர்ச்சி முறையே 5.3% மற்றும் 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தை பொறுத்த வரையில் 2022ல் கணிக்கப்பட்டுள்ள 3.4 சதவீதத்தில் இருந்து 2023ல் 2.9 சதவீதம் என்று குறைந்து. 2024ல் 3.1 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

இது குறித்து சர்வதேச நிதியத்தின் ஆய்வுத் துறை தலைமை பொருளியல் நிபுணர் மற்றும் இயக்குநர் பியர் ஒலிவியர் கூரின்சாஸ் கூறுகையில், "கடந்த அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி நாங்கள் கணித்ததில் பெரிய மாற்றமில்லை. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என்றளவிலேயே இருக்கும். மார்ச் வரைக்கானது இந்த கணிப்பு. அதன் பின்னர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படும். 2023 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகக் குறையும். இதற்கு வெளிவட்டார அழுத்தங்களே பெரும் காரணமாக இருக்கும்" என்று தெரிவித்தார். அதே நேரத்தில் 2024ல் மீண்டும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்... இந்தியாவுக்கு நல்ல செய்தி: பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்திருந்தாலும் நாட்டின் பணவீக்கம் குறையும் என்ற நல்ல செய்தியையும் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் அதன் பின்னர் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாகக் குறையும் என்றும் அதுவே 2024ல் இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறையும் என்றும் கணித்துள்ளது. இதனை ஐஎம்எஃப் ஆய்வுத் துறையின் டிவிஷன் தலைவர் டேனியல் லே தெரிவித்துள்ளார்.

உலகப் பணவீக்கம் என்பது 2022ல் சராசரியாக 8.8 சதவீதமாக உள்ள நிலையில் 2023 நிதியாண்டில் 4.3 சதவீதமாகவும் 2024ல் 3.5 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

33 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

மேலும்