பார்மா நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய வேண்டும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு

By பிடிஐ

பார்மா துறையில் முதலீடு செய்ய வாருங்கள் என்று ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஆந்திராவில் ஹெல்த்கேர் நிறு வனங்களை அமைப்பதற்கு எளிதான கொள்கைகளை அரசு ஏற்படுத்தித் தரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் நடந்த 68-வது இந்திய பார்மச்சூடிகல்ஸ் மாநாட்டின் இரண்டாவது நாள் கூட்டத்தில் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: அனைத்து பார்மசூடிகல்ஸ் நிறுவனங்களும் ஆந்திராவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். ஆந்திர அரசின் சாதகமான கொள்கைகளை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே சில நிறுவனங்கள் இங்கு ஆலையை அமைத்துவிட்டன. சில நிறுவனங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றன. எனக்கு உங்கள் உதவியும் ஒத்துழைப்பும் தேவை. நீங்கள் ஆந்திராவில் முதலீடு செய்யும்படி நான் விரும்பிக் கேட்டுக் கொள் கிறேன். உங்களுடைய அனைத்து தேவைகளையும் ஆந்திர அரசு செய்து தரும். தண்ணீர், மின்சாரம், நிலம் மற்றும் அனைத்து வசதி களும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வழங்கப்படும்.

ஆந்திர மாநிலம் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம். கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் நீளம் உள்ள கடற்கரையில் 6 துறைமுகங்கள் தற்போது இயங்கி வருகின்றன. இன்னும் சில துறைமுகங்கள் விரைவில் வர இருக்கின்றன. பன்னாட்டு துறைமுகம் விஜயநகர மாவட் டத்திற்கு அருகில் போகபுறம் என்ற இடத்தில் உருவாக்கப்பட இருக்கிறது.

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை இந்தியா எட்டும். நாம் தொழில்நுட்பத்திலும் ஆங்கில மொழியிலும் மிக வலுவாக இருக்கிறோம். இவ்வாறு சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

இந்த விழாவில் பார்மசி நிறுவ னங்களை சார்ந்த பிரதிநிதிகள், கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் பார்மா நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளோடு புதிய ஆலைகளை அமைப்பது குறித்து சந்திரபாபு நாயுடு விவாதித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

இந்தியா

31 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

தமிழகம்

11 hours ago

சுற்றுலா

11 hours ago

மேலும்