டாடா குழும நிறுவனங்களில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்வு

By பிடிஐ

ரத்தன் டாடாவுக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான பிரச்சினைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் டாடா குழும நிறு வனங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்களுடைய முத லீட்டை உயர்த்தி இருக்கின்றன. நவம்பர் மாத முதலீடு விவரங்களில் இவை தெரிய வந்துள்ளன.

டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் மியூச் சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீடு உயர்ந்துள்ளதாக மார்னிங்ஸ்டார் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாறாக இந்தியன் ஓட்டல்ஸ், டைட்டன், டாடா குளோபல் பிவரேஜஸ் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் மகாராஷ்டிரா ஆகிய நிறுவனங்களின் முதலீடு குறித்த தகவல் கிடைக்கவில்லை.

கடந்த மாதம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 1.38 கோடி பங்கு களை வாங்கி இருக்கின்றன. முந்தைய மாதத்தை விட இந்த மாதம் மியூச்சுவல் பண்ட் நிறு வனங்களின் பங்கு 11.33 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

இதேபோல டாடா பவர் நிறு வனத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களின் பங்கு 8.36 சதவீதமும், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 8.17 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து 24-ம் தேதி நீக்கப்பட்டார். ஆனால் குழும நிறுவனங்களில் இருந்து அவரை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாடா குழும நிறுவனங்களில் மியூச்சுவல் பண்ட் முதலீடு உயர்ந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

18 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

11 hours ago

மேலும்