‘காப்பீட்டில் அந்நிய முதலீடு வரவேற்கத்தக்கது’

By செய்திப்பிரிவு

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று இந்தியா பர்ஸ்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பி.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

ஐபிஓ சந்தை மந்தமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், இந்த துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதால் ஊக்கம் கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார். இருந்தாலும் எங்களுக்கு புதிய முதலீடு ஏதும் தேவை இல்லை என்றும் கூறினார். இப்போதைக்கு போதுமான நிதி இருக்கிறது. வளர்ச்சிக்கான நிதி தேவையே தவிர தினசரி செயல்பாடுக்கு நிதி தேவையில்லை என்று தெரிவித்தார்.

பாங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, இங்கிலாந்தை சேர்ந்த லீகல் அண்ட் ஜெனரல் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து ஆரம்பித்ததுதான் இந்தியாபர்ஸ்ட் நிறுவனம். பிரேக் ஈவன் எப்போது என்ற கேள்விக்கு இந்த வருட நவம்பர் மாதம் அடைந்து விடுவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 mins ago

ஜோதிடம்

18 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்