தங்கம் பவுனுக்கு ரூ.232 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (டிச.5) பவுனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.40 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்து 168 ஆக இருந்தது. இதன்பின்பு, விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதாவது, 8 மாதங்களுக்கு பிறகு, தங்கம்விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.40 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.29 உயர்ந்து, ரூ.5,045 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயர்ந்து, ரூ.72.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறுகையில்,"அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எனவே, தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்துவருகிறது. வரும் நாள்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்