நடுத்தர மக்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க எஸ்பிஐ திட்டம்

By செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்கம் காரணமாக பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க எஸ்பிஐ திட்டமிட்டிருக்கிறது. இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அதிகபட்ச ரூ.25,000 மட்டுமே செலவு செய்ய முடியும்.

நடுத்தர மக்களுக்கு கிரெடிட் கார்டு தேவையாக இருக்கும், அவர் களுக்கு திருப்பிச் செலுத்தும் திறனும் இருக்கும். ஆனால் அவர் களிடம் கிரெடிட் கார்டு தகுதி இல்லை என்பதால் அவர்களுக்கு கார்டு வழங்கப்பட்டிருக்காது. இப் போது ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க திட்டமிட்டிருப்பதாக எஸ்பிஐ கார்டு தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஜசூஜா தெரி வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அவர்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் செலவு செய்யாமல் இல்லை. அவர் களிடன் கிரெடிட் கார்டு இல்லை அதனால் செலவு செய்யாமல் இருக்கிறார்கள். கிரெடிட் கார்டு வழங்குவதற்காக வருமான அள வைக் குறைக்க இருக்கிறோம். இதன்மூலம் தகுதி வாய்ந்த வாடிக் கையாளர்கள் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தலாம். ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கூட எங்களுக்கான வாடிக்கை யாளர்கள்தான்.

தற்போது ஒரு கிரெடிட் கார்டு வழங்க 9 முதல் 11 நாட்கள் ஆகின்றது. இதனை 3 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டி ருக்கிறோம். தேவை அதிகமாக இருக்கும் சந்தையில் அதிக பணி யாளர்களைப் பணியில் அமர்த்தி இருக்கிறோம். இவர்கள் நகரின் முக்கியமான பகுதிகள், ஷாப்பிங் மால்களில் இருப்பார்கள். கிரெடிட் கார்டு தேவைப்படுபவர்கள் இவர் களை உடனடியாக அணுகலாம். பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் விதம் மாறி இருக்கிறது.

முன்பு ஒருவர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி 20 ரூபாயும், ரொக்கமாக 80 ரூபாயும் செலவு செய்தால், இப்போது 90 ரூபாய் கிரெடிட் கார்டிலும் 10 ரூபாய் ரொக்கமாகவும் செலவு செய்கிறார்.

பல வாடிக்கையாளர்கள் கிரெ டிட் கார்டு பயன்படுத்தாமல் இருந் தனர். அந்த வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை புதுப்பிக்கு மாறு கேட்டு வருகின்றனர். பெரிய எண்ணிக்கையிலான கிரெடிட் கார்டுகள் இதுவரை பயன் படுத்தப்படாமலே இருக்கிறது. இப்போதைக்கு மக்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் கார்டு வழங்குவதற்காக ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்