வார்தா புயலால் ஏற்றுமதியாளர்களுக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம்: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தகவல்

By செய்திப்பிரிவு

வார்தா புயல் காரணமாக சென்னை யில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள் ளதாக இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எப்ஐஇஓ) தெரிவித்துள்ளது. மேலும், நடை முறை மூலதனத்துக்கு அரையாண் டுக்கான வட்டித் தொகையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் வீசிய வார்தா புயலால் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுமார்300கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து,இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணை யத்தின் (தென்மண்டலம்) தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் கூறியதாவது:

கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஏராளமான தொழிற்சாலைகள் பாதிப்படைந்தன. இந்த ஆண்டு புயல் காரணமாக இத்தொழிற் சாலைகள் பாதிப்படைந்துள்ளன.

மின்விநியோக தடை, தண்ணீர் பிரச்சினை மற்றும் பணியாளர்கள் வேலைக்கு வராதது உள்ளிட்ட பிரச்சினைகளால் பல தொழிற் சாலைகள் இன்னும் திறக்கப் படவில்லை. இவை மீண்டும் பழைய நிலையில் செயல்பட இன்னும் ஒரு சில வாரம் ஆகும். இப்புயலால் சென்னையில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.300கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங் களால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்களை தமிழக அரசு உரிய ஆய்வு செய்து வகுக்க வேண்டும். குறிப்பாக,சாலை வசதி, மின்விநியோகம், நகர வடிவமைப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மேலும்,இதுபோன்ற இயற்கை சீற்றங்களை அடிக்கடி சந்திக்கும் நாடுகள் எவை என்றும், அவை எவ்வாறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்கின்றன என்பது குறித்தும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். கடந்த2015-16-ம் ஆண்டு 1லட்சத்து 43ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில்61ஆயிரத்து 42கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. அதேபோல்,கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஏற்றுமதி சுமார்15முதல்20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

எனவே,புயலால் பாதிக்கப் பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களுடைய தொழில் நடைமுறை மூலதனத்துக்கு அரையாண்டுக்கான வட்டித் தொகையை மத்திய,மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். மேலும்,மூலதனப் பொருட்களுக்கு போதிய நிதியுதவி வழங்குவதோடு அதற்கான வட்டியில் சலுகையும் வழங்க வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார் சக்திவேல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

45 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்