வீட்டு கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ

By பிடிஐ

கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி விழாக்கால திட்டத்திற்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி பொதுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்ததையொட்டி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது.

விழாக்கால திட்டம், பெண்களுக்கான வீட்டுக்கடன் ஆகியவற்றிக்கு வட்டி விகிதம் 9.1 சதவீதமாகவும் மற்றவர்களுக்கு வீட்டுக்கடன் விகிதம் 9.15 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வீட்டுக்கடனுக்கு ஒப்புதல் கிடைப்பவர்களுக்கு மட்டுமே விழாக்கால திட்டம் பொருந்தும்.

``இந்த வட்டி விகித குறைப்பின் மூலம் 50 லட்ச ரூபாய்க்கான கடன் தொகைக்கு மாதந்திர இஎம்ஐ தொகையில் 542 ரூபாய் குறையும். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மாதாந்திர இஎம்ஐ தொகை குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய வட்டிக் குறைப்பின் மூலம் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கியாக எஸ்பிஐ உள்ளது’’ என்று எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் ரஜினிஷ் குமார் தெரிவித்தார்.

தேனா வங்கி வட்டிக் குறைப்பு

அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கும் தேனா வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது கடனுக்கான வட்டிவிகிதம் 9.40 சதவீதமாக இருக்கிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு இதே வட்டி விகிதம் நீடிக்கும் என தேனா வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

தமிழகம்

49 mins ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்