‘இ-பசு ஹாட்’ பசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க தனி ஆன்லைன் இணையதளம்

By பிடிஐ

விவசாயிகள் மற்றும் இத்துறை தொழில் முனைவோரை பால் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு ஆன்லைன் இணைய தளத்தை இந்த வாரம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இ-பசு ஹாட் என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் வேளாண் பொருள்களை வாங்க, விற்க முடியும்.

உயர் ரக கால்நடைகளின் சினை முட்டைகள் கிடைப்பது உள்ளிட்ட தகவலும் இந்த ஆன்லைன் இணையதளம் மூலம் பெறலாம்.

குறிப்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர், உயர் ரக பசுவான குஜராத்தைச் சேர்ந்த கிர் ரக பசுவை வாங்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும். இந்த கேள்விக்கு விடை காணும் வித மாக இந்த இணையதளம் தொடங் கப்பட்டதாக மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

இந்த இணையதளம் மூலம் விவ சாயிகள் மாடுகள் வாங்க மற்றும் விற்க முடியும். அது தவிர விவசாயத் துக்குத் தேவையான இடு பொருள் கள், உரங்கள் உள்ளிட்டவற்றையும் பெற முடியும். மேலும் உயர் ரக பசுக்களின் உறை நிலை விந்து களைப் பெற்று உயர் ரக கலப்பினங் களை உருவாக்க முடியும். இணைய தள முகவரி wwww.epashuhaat.gov.in

இந்த இணையதளத்தில் கை யிருப்பில் உள்ள விவசாயப் பொருள்கள், பசுக்களுக்கு அளிக்க வேண்டிய உணவு முறைகள், கால்நடைத் தீவனங்கள் கிடைக்கு மிடம், அது எந்த அளவுக்கு இருப் பில் உள்ளது உள்ளிட்ட தகவலும் கிடைக்கும். பொருள்களை எவ் விதம் அனுப்புவது உள்ளிட்ட தகவ லும் இந்த இணையத்தில் பெறலாம்.

சான்றளிக்கப்பட்ட வேளாண் பொருள்கள் அனைத்தும் இ-சந்தை மூலம் விற்பனை செய்யப்படும். இது தவிர சான்றளிக்கப்படாத வேளாண் இடு பொருள்களையும் இதில் விற்க முடியும்.

இந்த இணையதள முகவரியில் யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். ஆனால் வர்த்தகம் தொடர்பான பரிவர்த்தனைக்கு பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

பால் உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இதன் மூலம் விவசாயிகளின் வரு மானத்தை இருமடங்காக உயர்த் தவும் அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த 6 ஆண்டுகளுக்குள் அதா வது 2022-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிடப்பட் டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக விவசாயிகள் மத்தியில் இணையதளம் மூலமான வர்த்தக வாய்ப்பை உருவாக்குவது பிறகு அவர்கள் இதன் உதவி யால் உபரி வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள பயன்படுத்து வதும் நோக்கமாகும்.

மத்திய அரசு வேளாண் பொருள் விற்பனைக்கு இ-சந்தையை உரு வாக்கியுள்ளது. மேலும் பசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 825 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

33 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்