தாலேஸ் அவந்த் நிறுவனத்துடன் எமிரேட்ஸ் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் நிறுவனம் தாலேஸ் அவந்த் நிறுவனத்துடன் பல கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை (இன்ஃபோடெயின்மென்ட்) மேம்படுத்தித் தரும் பணியை தாலேஸ் மேற்கொள்ளும்.

இந்நிறுவனம் புதிதாக வாங்கியுள்ள 777எக்ஸ் ரக விமானங்களில் பொழுதுபோக்கு அம்சங்களை தாலேஸ் மேற் கொள்ளும். இந்த விமானங்களில் ஐஇஎப்சி சிஸ்டத்தை தாலேஸ் அமைத்துத் தரும். முதல் கட்டமாக 777எக்ஸ் விமானங்களில் 50-ல் இந்த சேவை ஏற்படுத்தித் தர ஒப்பந்தம் வழிவகை செய் கிறது. மொத்தம் 150 விமானங் களுக்கு எமிரேட்ஸ் ஆர்டர் அளித்துள்ளது.

பயணிகளுக்கு சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்கும் விமானங்களில் தொடர்ந்து 12-வது ஆண்டாக எமிரேட்ஸ் நிறுவனம் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவன விமானங்களில் 2500 சேனல், சமீபத்திய திரைப் படங்கள், நகைச்சுவைத் தொடர்கள், டிவி நேரலை, இசை, கம்ப்யூட்டர் கேம்ஸ் உள்ளிட்டவை பயணிகளுக்காக அளிக்கப்படும் பொழுது போக்கு அம்சங்களாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்