அக்டோபர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,51,718 கோடி

By செய்திப்பிரிவு

அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,51,718 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஏப்ரல் 2022-க்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் ஈட்டிய மாதமாக அக்டோபர் 2022 திகழ்கிறது. அதேபோல் ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியிருப்பது, இது 2-வது முறையாகும்.

மேலும், உள்நாட்டு பணப்பரிமாற்றத்திலும், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகபட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது. இதுவரை மாதாந்தர ஜிஎஸ்டி வரி வருவாய், ரூ1.4லட்சம் கோடியைத் தாண்டிய 9 மாதங்களில், அக்டோபர் மாதம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

அக்டோபர் 2022-க்கான தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.9,540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

2 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்