வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப் கணிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக பொருளாதார கணிப்பு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. அதில், 2021-ல் 6 சதவீதமாக இருந்த உலக பொருளாதார வளர்ச்சி 2022-ல் 3.2 சதவீதமாகக் குறையும் என்றும், 2023-ல் இது 2.7 சதவீதமாக மேலும் குறையும் என்றும் கணித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பெரும்பாலும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் கடந்த 2021-ல் 5.2 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2022-ல் 2.4 சதவீதமாகவும், 2023-ல் 1.1 சதவீதமாகவும் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2021-ல் 5.7 சதவீதமாக இருந்த அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, 2022-ல் 1.6 சதவீதமாகவும், 2023-ல் ஒரு சதவீதமாகவும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இதேபோல், கடந்த 2021-ல் 8.1 சதவீதமாக இருந்த சீன பொருளாதார வளர்ச்சி, 2022-ல் 3.2 சதவீதமாகவும், 2023-ல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடாகத் திகழும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி கடந்த 2021-ல் 8.7 சதவீதமாக இருந்த நிலையில், அது சற்று குறைந்து 2022-ல் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், 2023-ல் அது 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் குறைவு இருந்தாலும், உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடாக இந்தியா தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்