இவரைத் தெரியுமா?- பிரைன் மெக்நமரா

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்கே கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஜிஎஸ்கே கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தின் தலைவராக இருந்தவர்.

2004-ம் ஆண்டு நோவார்டிஸ் நிறுவனத்தில் சேர்ந்தவர். அந்த நிறுவனத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர். 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஓடிசி பிரிவின் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

1998-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ப்ரோக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் சந்தையிடல் பிரிவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.

அமெரிக்காவில் உள்ள யூனியன் கல்லூரியில் மின் பொறியியல் பிரிவில் பிஎஸ் பட்டமும், சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் பைனான்ஸ் பிரிவில் மேலாண்மை உயர்கல்வியும் முடித்தவர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்