‘ஜன்தன் யோஜனா’ திட்ட வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாடு இன்றி முடங்கிக் கிடந்த ஜன்தன் யோஜனா திட்ட வங்கிக் கணக்குகளில் இப்போது அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பணத்தை போட்டு வருகின்றனர்.

அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக 2014-ம் ஆண்டில் பாஜக அரசு `ஜன்தன் யோஜனா’ எனும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அரசின் மானிய உதவிகள் அனைத் தும் இதன் மூலம் மக்களுக்குச் சென்றடைவதற்காக இந்தக் கணக்கு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு களாக இந்தக் கணக்கில் பெரும்பாலானவை செயல் பாட்டில் இல்லாமல் இருந்தன.

மத்திய அரசு ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து அவற்றை வங்கிக் கணக்கில் போட்டு மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது. இதனால் இப்போது இந்தக் கணக்கில் பணத்தைப் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது.

இவ்விதம் தொடங்கப்பட்ட கணக்கில் நவம்பர் 8-ம் தேதி வரை எவ்வித செயல்பாடும் இல்லாமலிருந்து. ரூ. 49 ஆயிரம் வரை ரொக்கத் தொகையை பான் கார்டு இல்லாமல் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தக் கணக்குகளில் பணம் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வசதி படைத்தவர்கள் இடைத் தரகர்கள் மூலமாக இவ்விதம் ஜன்தன் யோஜனா கணக்கு வைத் திருப்பவர்கள் மூலமாக தங்களது கறுப்பு பணத்தை கணக்கில் கொண்டு வர திட்டமிட்டு செயல் படுத்துவதாக பெயர் குறிப்பிட விரும்பாத வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டெல்லியை அடுத்துள்ள ஆக்ராவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் மட்டும் ஜன்தன் யோஜனா கிளையில் அதிக எண்ணிக்கையிலானோர் பணத்தை போட்டுள்ளனர். இந்தக் கிளையில் 15 ஆயிரம் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு கள் உள்ளன. இதில் பெரும்பா லானவை செயல்படுத்தப்படா மலே கடந்த இரண்டு ஆண்டு களாக இருந்தன. ஆனால் மத்திய அரசு 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தவுடன் இதில் பணம் செலுத்துவோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விதம் பணம் செலுத்து வோரைப் பார்க்கும்போதே அது அவர்களுடைய பணம் அல்ல என்பது நிச்சயமாகத் தெரிகிறது. சில தொழிற்சாலைகளில் பணி புரிவோரை இடைத் தரகர்கள் இவ்விதம் பயன்படுத்துவது தெரிகிறது. குறுகிய ஆதாயத்துக்கு இவர்கள் பலியாகின்றனர் என்று மற்றொரு கிளை மேலாளர் தெரிவித்தார். ஆனால் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணம் குறித்த விவரத்தை அரசு கண்காணிக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தனது வங்கிக் கணக்கில் ரூ. 49 ஆயிரம் செலுத்திய ஒரு நபரை செய்தியாளர் சந்தித்து கேட்டபோது, தனக்கு ரூ. 500 தருவதாகக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்விதம் பணம் போடுவதால் வங்கியில் என் மீதான அபிப்ராயம் போய்விடும் என்பது தெரியும். ஆனால் எதிர்காலத்தில் பணத் தேவையை இடைத் தரகர்தான் நிறைவேற்றுவார். அதனால் இந்த உதவியை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும், கள்ளப் பணத்தை புழக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தாலும், அதை எப்படி சமாளித்து தங்களது பணத்தை காத்துக் கொள்வது என்பதை நிதானமாக யோசித்து, இத்திட்டத்தில் உள்ள குறை களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வோர் இருக்கும் வரை, அரசின் திட்டம் முழுமையாக நிறைவேறுவது சிரமம் என்றே வங்கியாளர்கள் தெரிவிக் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

க்ரைம்

1 min ago

சுற்றுச்சூழல்

5 mins ago

தமிழகம்

14 mins ago

உலகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

க்ரைம்

42 mins ago

தமிழகம்

31 mins ago

கல்வி

39 mins ago

உலகம்

50 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்