நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா தாக்கல்

By பிடிஐ

ஜிஎஸ்டி இழப்பீடு மசோதாவை வரவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த மசோதா வில் ஜிஎஸ்டி வரியால் மாநிலங் களுக்கு ஏற்படப் போகும் வரி இழப்பை மத்திய அரசு எவ்வாறு சரி செய்யப் போகிறது என்பது உட்பட பல்வேறு விவரங்கள் இடம்பெறும்.

ஜிஎஸ்டி மசோதாவால் மாநிலங் களுக்கு ஏற்படும் இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்குவதற்கான சட்டப் பாதுகாப்பை ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா அளிக்கும். இந்த மசோதாவை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறது. முதல் ஐந்து வருடங்களில் வருவாய் வளர்ச்சி விகிதம் 14 சதவீதத்துக்கு குறைவாக இருப்பின் மத்திய அரசு மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கும்.

இழப்பீடு தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான புரிதலில் எந்தவொரு தவறும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக தனியான ஒரு சட்டமும் கொண்டு வரப்படுகிறது.

மத்திய அரசு அதிகாரிகள் வரைவு ஜிஎஸ்டி இழப்பீடு மசோ தாவை நவம்பர் 15-ம் தேதிக்குள் இறுதி செய்துவிடுவார்கள். பின்பு இது மாநிலங்களின் பார்வைக்கு அனுப்பப்படும். பின்பு நவம்பர் 24-25ம் தேதியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் இழப்பீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும்.

சமீபத்தில் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி அமைப்பு முறைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. 5,12,18 மற்றும் 28 சதவீத வரி விதிப்புக்கு ஒப்பு தல் வழங்கப்பட்டிருக்கிறது. முக்கி யமான பொருட்களுக்கு குறைந்த வரியும், சொகுசு பொருட்களுக்கு அதிக பட்ச வரியும் விதிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உயர் ரக கார்கள், புகையிலை, பான் மசாலா, குளிர் பானங்கள் ஆகியவற்றிக்கு அதிக பட்ச வரியும் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வரி அமைப்பின் படி பசுமை (கிளீன் எனர்ஜி ) செஸ் மற்றும் சொகுசுப் பொருட்களுக்கான செஸ் ஆகியவற்றின் மூலம் வரும் 50,000 கோடி ரூபாய் வருவாயை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பயன்படுத்த உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

46 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்