இவரைத் தெரியுமா?- தீபக் சந்த்னானி

By செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் இ-பேமென்ட் சேவைகளை வழங்கி வரும் வேர்ல்டுலைன் நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்தியத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஒபோபே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2007-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வயர் அண்ட் வயர்லஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2002-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டு வரை என்சிஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2001-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டு வரை யாகூ நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவராக இருந்தவர்.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக தனது பணியைத் தொடங்கியவர்.

டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதார பிரிவில் இளங்கலை பட்டமும் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்