ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி வங்கிகளில் டெபாசிட் வட்டி குறைப்பு

By செய்திப்பிரிவு

முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்திருக் கின்றன. பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் டெபாசிட் குவிவதால் டெபாசிட் வட்டியை இந்த வங்கிகள் குறைத்திருக்கின்றன.

டெபாசிட் மீதான வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து கடன்களுக்கான வட்டி விகிதம் இன்னும் சில நாட்களில் குறைப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. 390 நாட்கள் முதல் 2 வருடத்துக்கான டெபாசிட் வட்டி விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாக ஐசிஐசிஐ வங்கி குறைத்திருக்கிறது.

அதேபோல ஒரு கோடி ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு (அனைத்து வகையாக காலம்) 0.25 சதவீதம் வட்டியை ஹெச்டிஎப்சி வங்கி குறைத்திருக்கிறது. ஒரு வருட டெபாசிட் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 6.75 சதவீதமாக குறைக்கப்பட்டிருக் கிறது. அதேபோல 3 வருடம் முதல் 5 வருடம் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டிருக்கிறது.

முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் சில நாட்களுக்கு முன்பு டெபாசிட் வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்