இவரைத் தெரியுமா?- பிரசாந்த் ரூயா

By செய்திப்பிரிவு

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமமான எஸ்ஸார் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி. எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனர் சசி ரூயாவின் மகன்.

எஸ்ஸார் குழும செயல்பாடுகளில் 1985-ம் ஆண்டு இணைந்தவர். நிறுவனத் தின் பல்வேறு முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கனடாவின் அலகோமா ஸ்டீல் மற்றும் இண்டஸ் டவரின் 14 சதவீத பங்குகளை கையகப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர். குஜராத்தின் வாடிநார் துறைமுகம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரஷ்யாவின் ரோஸ்நெப்ட்க்கு விற்பனை செய்ததில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.

சர்வதேச அளவில் இரும்பு உருக்கு துறை சார்ந்து பல முக்கிய பொறுப்புகளிலும், ஒழுங்குமுறை அமைப்புகளிலும் உள்ளார். தேசிய ஹைட்ரோகார்பன் மற்றும் பெட்ரோலியம் குழுவின் தலைவராகவும், சர்வதேச இரும்பு மற்றும் உருக்கு கல்வி நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் உள்ளார்.

உலக பொருளாதார அமைப்பின் எனர்ஜி கமிட்டி, சர்வதேச உருக்கு கூட்டமைப்பின் தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

மும்பை பல்கலைக் கழகத்தில் மேலாண்மையியலில் உயர்கல்வி முடித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

ஆன்மிகம்

15 mins ago

இந்தியா

19 mins ago

உலகம்

6 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

42 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்