பங்குச் சந்தை சரிவு: வங்கிப் பங்குகள் விலையேற்றம்

By பிடிஐ

இந்தியப் பங்குச் சந்தைகள் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று சரிந்தன. பிஎஸ்இ-யின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிந்து 27529 புள்ளிகள் வர்த்தகம் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டியின் குறியீடு 63 புள்ளிகள் சரிந்து 8520 புள்ளிகளின் முடிந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் நிலவும் வர்த்தகச் சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் சரிவைக் கண்டுள்ளன.

நேற்றைய வர்த்தகத்தில் வங்கி துறை குறியீடு தவிர அனைத்து துறை குறியீடுகளும் சரிவைக் கண்டன. சென்சென்ஸ் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி பங்கு மட்டும் அதிகபட்சமாக 7 சதவீதம் லாபம் கண்டது. தவிர என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஸ் பங்குகள் ஏற்றத்தையும், ஜீ எண்டர்டெயின்மெண்ட், எம் அண்ட் எம், ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் சரிவையும் கண்டன.

சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்தவரையில் டாலரின் மதிப்பு கடந்த ஏழு மாதங்களில் அதிகபட்ச ஏற்றத்தை நேற்று கண்டுள்ளது. தவிர அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனெட் யெலன் இது குறித்து தெரிவித்துள்ள கருத்துகளும் சர்வதேச பங்கு சந்தைகளின் வர்த்தக சரிவுக்கு காரணம் என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்