இன்போசிஸ் நிகர லாபம் 6.1% உயர்வு: வளர்ச்சி 8 - 9 சதவீதமாக இருக்கும் என கணிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ.3,606 கோடியாக உள்ளது. அதே சமயத்தில் குறுகிய காலத் தில் நிச்சயமற்ற சூழல் இருக்கும் என்றும், இந்த ஆண்டில் வருமானம் குறையும் என்றும் இன்போசிஸ் கூறியிருக்கிறது. வருமானம் குறைவது குறித்து நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இன் போசிஸ் தெரிவித்திருப்பது குறிப் பிடத்தக்கது. இதன் காரணமாக வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 52 வார குறைந்தபட்ச விலையான 996.25 ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 2.3 சதவீதம் சரிந்து 1,027 ரூபாயில் முடிவடைந்தது.

இதேபோல நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்-ம் வருமானம் குறைவாக இருக்கக்கூடும் என்று தெரிவித் திருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.3,398 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வருமானம் 10.7 சதவீதம் உயர்ந்து ரூ.17,310 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.15,635 கோடியாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில் 8 முதல் 9 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது. ஐடி துறையின் வளர்ச்சி 10-12 சதவீதம் இருக்கும் என நாஸ்காம் கணித்திருக்கும் நிலையில் அதைவிட குறைவான வளர்ச்சி இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. செயல்பாட்டு வரம்பு 0.80 சதவீதம் குறைந்து 24.9 சதவீதமாக இருக்கிறது. ஜூன் காலாண்டில் செயல்பாட்டு வரம்பு 24.1 சதவீதமாக இருந்தது.

செப்டம்பர் காலாண்டில் புதி தாக 78 வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை 1,136 ஆக இருக்கிறது. ஜூன் காலாண்டில் 15.8 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் முடிவில் 1.99 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் வருமானம் 2.6 சதவீதமாகவும், இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானம் 29 சதவீதமாகவும், ஐரோப்பாவில் இருந்து கிடைக்கும் வருமானம் 1.1 சதவீதமாகவும் இந்த காலாண்டில் (ஜூன் காலாண்டு உடன் ஒப்பிடும் போது) உயர்ந்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.11 அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சம்பளங்களில் மாற்றம்

சூர்யா சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டிஎன் பிரகலாத் இன்போசிஸ் இயக்குநர் குழுவில் இணைகிறார். தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநராக நேற்று முதல் இணைந்திருக்கிறார். தவிர நிறு வனத்தின் தலைமைச் செயல் பாட்டு அதிகாரி (சிஒஒ) மற்றும் தலைமை நிதி அதிகாரி எம்டி ரங்கநாத் ஆகியோரின் ஊதியங் கள் மாற்றப்படுகின்றன. வரும் நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இவர்களது ஊதியங்கள் மாறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்