வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம்: ரூ.65,250 கோடி கருப்பு பணம் வெளிவந்துள்ளது - மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

By பிடிஐ

வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் (ஐடிஎஸ்) திட்டத்தின் கீழ் கடந்த நான்கு மாதங்களில் ரூ.65,250 கோடி மதிப்பிலான சொத்து மற்றும் வருமானக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் கடைசி நாளாக செப்டம்பர் 30 ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜேட்லி, இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலுமாக 64,275 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மொத்தம் ரூ.65,250 கோடி மதிப்பிலான சொத்துகள் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 45 சதவீதம் அளவு அரசு வரியாகவும், அபராதமாகவும் எடுத்துக் கொள்ளும்.

உள்நாட்டில் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வெளிக் கொண்டுவர மத்திய அரசு தானாக முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தை முன்வைத்தது. 45 சதவீதம் அளவுக்கு வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த வருமானத்தை சட்டபூர்வமானதாக மாற்றிக் கொள்வதற்காக ஜூன் 01 முதல் இந்த திட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு நான்கு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு 1997ல் அறிவிக்கப்பட்ட ஒரு முறை பொதுமன்னிப்பு திட்டத்தைப் போல இந்த திட்டம் கிடையாது. 1997 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் ரூ.9,760 கோடி மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது. இதன் சராசரி ரூ.7 லட்சம்தான் என்றும் குறிப்பிட்டார். ஆனால் தற்போது வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப் பட்டுள்ள கணக்குகளின் சராசரி 1 கோடி ரூபாயாக உள்ளது. இந்த தொகை நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தோடு சேர்க்கப்பட்டு நீண்ட கால மக்கள் நல பணிகளுக்கு செலவிடப்படும் என்றும் ஜேட்லி கூறினார்.

மண்ணெண்ணெய் மானியம் நிறுத்தப்படும்

நாட்டில் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசு அடுத்த இலக்கு வைத்துள்ளது. உணவு மற்றும் உரத்துக்கான மானியங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட முயற்சிகளைப் போல இது நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் கள்ளச் சந்தையில் மண்ணெண்ணெய் விற்பதைத் தடுக்க முடியும் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் பயன்பாட்டில் மண்ணெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பல பகுதிகள் இதை தவறான கையாளுகின்றன. இதற்காக பல ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்குகிறது. இதனால் மண்ணெண்ணெய் இலவச விநியோகத்திற்கு மாநில அரசுகள் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதை குறிப்பிட்டார்.

குறிப்பாக சண்டீகர், ஹரியா ணா, யூனியன் பிரதேசங்களில் மண் ணெண்ணெய் இலவச விநியோகத் திற்கான முயற்சிகளை சுட்டிக் காட் டினார். மண்ணெண்ணெய் விநியோ கம் தவறாகக் கையாளப்படுகிறது. ஆனால் நாட்டின் குறிப்பிட்ட பிரிவினருக்கு மண்ணெண்ணெய் அத்தியாவசிய தேவையாக உள்ளது. இதனால் மண்ணெண் ணெய் பொது விநியோக சிக் கலுக்கு புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அதன் சரியான பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இதற்காக நேரடி மானியத்திட்டம் 2016-17 ஆண்டில் நாடு முழுவதும் 39 மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதை மேலும் விரிவுபடுத்த மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம் என்றும் ஜேட்லி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்