பயணிகள் வாகன பிரிவில் 3-ம் இடத்தை பிடிக்க டாடா மோட்டார்ஸ் திட்டம்

By செய்திப்பிரிவு

பயணிகள் வாகன விற்பனையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் 2020-ம் ஆண்டில் மூன்றாம் இடத்தைப் பிடிக்க திட்டமிடுவதாக கூறியிருக்கிறது. முதல் இடத்தில் மாருதி சுசூகியும், இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் நிறுவனமும் தற்போது இருக்கிறது.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவுத் தலைவர் மாயேங் பரேக் கூறியதாவது: அடுத்த ஐந்தாண்டு களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டிருக்கிறோம். அனைத்து விதமான வாகனங்களும் டாடா மோட்டார்ஸில் இல்லை. அதனால் அனைத்து பிரிவுகளில் புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும்.

உதாரணத்துக்கு பிரீமியம் ஹாட்ச்பேக் பிரிவில் எங்களிடம் கார்கள் இல்லை. அதேபோல சிறிய ரக எஸ்யூவி ரக கார்கள், எக்ஸி கியூட்டிவ் செடேன் ரக கார்கள் இல்லை. அடுத்த ஜனவரி ஹெக்ஸா என்னும் எஸ்யூவி ரக கார் அறிமுகப்படுத்த திட்டமிட் டிருக்கிறோம். பயணிகள் மற்றும் வர்த்தக் வாகனங்களுக்காக ரூ.3,500 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டுக்குள் பயணிகள் வாகன பிரிவில் மூன்றாம் இடத்துக்கு வர திட்டமிட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 mins ago

ஓடிடி களம்

2 mins ago

ஜோதிடம்

32 mins ago

தமிழகம்

27 mins ago

க்ரைம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

17 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

47 mins ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்