பில்களில் உரிமம் எண் கட்டாயம்: உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: உணவுப் பொருட்களின் பில்களில் உரிமம் எண்ணைக் கட்டாயம் அச்சிட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் உணவுப் பொருட்கள் தயார் செய்பவர்கள் அனைவரும் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். மேலும் ஓட்டல்கள், சிறிய விற்பனைக் கடைகள் என உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் இந்த அனுமதியைப் பெற வேண்டும். இந்த அனுமதி பெறாமல் உணவுப் பொருட்கள் விற்பனைக் கடைகள் நடத்துவது சட்டப்படி குற்றம் ஆகும்.

இந்நிலையில், உணவுப் பொருட்களின் பில்களில் உணவுப் பாதுகாப்பு உரிமம் எண்ணை கட்டாயம் அச்சிட வேண்டும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உணவுப் பொருட்கள் கண்டறிவதை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு தொடர்பு செயலி மூலம் சரிபார்த்தால், உணவுப் பாதுகாப்பு குறைகளை உடனடியாக சரி செய்தல் ஆகியவற்றுக்கு இது உதவியாக இருக்கும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்