2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 70 லட்சம் வேலை இழப்புகள் உருவாகும்: பிரஹார் அமைப்பு ஆய்வில் தகவல்

By பிடிஐ

இந்தியாவில் கடந்த நான்கு வருடமாக ஒரு நாளைக்கு 550 வேலை இழப்புகள் ஏற்படுவதாக சிவில் சமூக அமைப்பான பிரஹார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் நாட்டில் 70 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது.

விவசாயிகள், சிறிய அளவில் உள்ள ரீடெய்ல் விற்பனை யாளர்கள், ஒப்பந்த தொழிலா ளர்கள், கட்டிட தொழிலாளர்கள் ஆகியோர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வாழ்வாதார பிரச்சினையைச் சந்தித்து வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இது தொடர்பாக பிரஹார் அமைப்பு வெளியிட்ட அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த ஆண்டு தொடக்கத்தில் தொழிலாளர் ஆணையம் வெளியிட்ட தகவல்படி இந்தி யாவில் 2015-ம் ஆண்டு 1.35 லட்சம் வேலைவாய்ப்புகளே உரு வாகியுள்ளன. ஆனால் 2013-ம் ஆண்டு 4.19 லட்சம் வேலை வாய்ப்புகளும் 2011-ம் ஆண்டு 9 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பார்க்கும் போது ஒருவித அச்ச உணர்வே ஏற்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு நாளைக்கு 550 வேலை இழப்புகள் ஏற்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் 70 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும். ஆனால் மக்கள் தொகை 2050-ம் ஆண்டு 60 கோடி அதிகரித்திருக்கும்.

வேலை வாய்ப்புகளை அதிகமாக வழங்கக்கூடிய துறைகள் மிகப் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளதே வேலைவாய்ப்பின்மைக்கு முக் கிய காரணம். இந்தியாவில் வேளாண்மைத்துறை 50 சதவீத வேலைவாய்ப்பை வழங்கி வரு கிறது. அதைத் தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை 40 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்தியாவில் முறைபடுத்தப்பட்ட துறை 1 சதவீதத்திற்கும் குறை வான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இந்தியா வில் முறைபடுத்தப்பட்ட தொழி லாளர்கள் 3 கோடி பேரும் முறைசாரா தொழிலாளர்கள் 44 கோடி பேரும் உள்ளனர்.

உலக வங்கியின் தகவல் படி இந்தியாவில் வேளாண்மைத் துறை 1994-ம் ஆண்டு 60 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தது. ஆனால் இது 2013-ம் ஆண்டு 50 சதவீதமாக குறைந் துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபு ரியும் தொழிலாளர்களின் எண் ணிக்கை பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22 கோடி டாலரை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக கடந்த மாதம் பிப்ரவரி மாதம் நடந்த மேக் இன் இந்தியா வாரத் தில் அறிவிக்கப்பட்டது. இருப்பி னும் இந்த முதலீடு 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக் குமா என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

விவசாயம், முறைசாராத ரீடெய்ல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. இந்த துறைகளை நம்பித்தான் 99 சதவீத மக்கள் இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறனர். மத்திய அரசு இந்த துறைகளை ஒழுங்குபடுத்தும் பணியை மட்டும் செய்யாமல் உதவியும் செய்ய வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங் கள்தான் தேவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

தமிழகம்

32 mins ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

50 mins ago

உலகம்

18 mins ago

க்ரைம்

41 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

தமிழகம்

54 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்