செப்டம்பரில் தங்க இறக்குமதி 10 சதவீதம் சரிவு

By பிடிஐ

சர்வதேச அளவிலும், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் செப்டம்பர் மாதத்தில் இந்தியா வின் தங்க இறக்குமதி 10.3 சதவீ தம் குறைந்து 180 கோடி டாலர் களாக உள்ளது. வர்த்தக அமைச் சகத்தின் புள்ளி விவரங்கள்படி இது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி 200 கோடி டாலர் களாக இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த பிப்ரவரியில் இருந்து தங்கத்தின் இறக்குமதி குறைந்து வருகிறது.

தங்கத்தின் இறக்குமதி குறைவ தினால் நடப்புக் கணக்கு பற்றாக் குறை கட்டுக்குள் இருக்கிறது. கடந்த செப்டம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 833 கோடி டாலர் களாக குறைந்துள்ளது. 2015-ம் ஆண்டு செப்டம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 1,016 கோடி டாலர்களாக இருந்தது குறிப் பிடத்தக்கது.

புள்ளி விவரங்கள்படி வெள்ளி யின் இறக்குமதி மதிப்பும் செப்டம்பர் மாதத்தில் 13.90 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 48.47 கோடி டாலர்களாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக நாட்டின் தங்க இறக்குமதி இந்த ஆண் டின் ஏப்ரல் முதல் ஜூலை வரை யிலான காலத்தில் 60 டன்னாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப் பட்ட 250 டன் என்கிற அளவை மிகக் கடுமையான சரிவாகும்.

சர்வதேச அளவில் தங்க இறக்குமதியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவதாகவும் உள்ளது. 2015-16 நிதியாண்டில் இந்தியா 650 டன் தங்கம் இறக்குமதி செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

31 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்