பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்?- இந்த வாரத்தில் அமைச்சரவை முடிவு

By செய்திப்பிரிவு

அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது. இந்த வாரத்தில் தேதியை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கடுத்து ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே பட்ஜெட் தேதியை அறிவிக்க மத்திய அரசு யோசித்து வருகிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இதனால் அதற்கு இடையில் பட்ஜெட்டை அறிவிக்க முடியாது என்பதால் மத்திய அரசு முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணை யரிடம் ஆலோசனை செய்ததில், அவர் மத்திய நிதியமைச்சரின் யோசனைக்கு இசைவு தெரிவித் ததாகவும், இதனால் அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்பது அரசின் விருப்பம்தான் என்று அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக் கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

செப்டம்பர் 21-ம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதற்கான யோசனைக்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப் பட்டது. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி வேலைநாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம், பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட திட்டங் களை அடுத்த நிதியாண்டு தொடக்கத்திலேயே நடை முறைக்கு கொண்டு வர முடியும்.

இது தொடர்பாக கடந்த வாரத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதற்கான நோக்கம் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு, அதன் மீதான விவாதங்கள் முடிந்து, அந்த மாற்றங்களை நிதியாண்டின் தொடக்கத்தி லிலேயே நடைமுறைக்கு கொண்டுவந்துவிட முடியும். இதன்மூலம் பருவகால தொடக் கத்தில் திறம்பட செயல்படவும், அக்டோபர் மாதத்தில் செலவினங்களின் தொடக்கமும் அமையும் என்று குறிப்பிட்டார்.

தவிர ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடங்குவதால் மத்திய அரசுக்கான செலவு ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும் என்றும் குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்டுதான் தேர்தல் தேதிக்கு முன்னரே பட்ஜெட்டை அறிவிக்கிறோம். தேர்தலுக்கு இடையூறாக பட்ஜெட் அறிவிப்பு இருக்காது என்று குறிப்பிட்டார். பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டால் அதன் மீதான விவாதங்களை மார்ச் 24-ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

க்ரைம்

39 mins ago

வெற்றிக் கொடி

50 mins ago

விளையாட்டு

47 mins ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்