சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க அனில் அம்பானி நிறுவனம் முடிவு

By செய்திப்பிரிவு

அனில் அம்பானிக்குச் சொந்த மான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவ னம் (ஏடிஏஜி) விரைவிலேயே சிறிய ரக பயணிகள் விமானத் தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள் ளது. 50 முதல் 80 பேர் பயணிக் கும் வகையிலான இந்த ரக விமானங்களை உக்ரைனின் அன் டோனோவ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயா ரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திய விமான தயாரிப்புப் பணியை தற்போது ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஹெச்ஏஎல் நிறுவனம் இத்தகைய விமான தயாரிப்புக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் (ஓஇஎம்) நிறுவனமாக ஒப்பந் தம் செய்ததை அடுத்து இத்தகைய சிறிய ரக விமானங்களைத் தயாரிக்கும் பணியை ரிலையன்ஸ் டிபன்ஸ் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறிய நகரங்கள் குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிடையே விமான போக்கு வரத்தை ஏற்படுத்த இத்தகைய சிறிய ரக விமானங்களுக்கான தேவை உள்ளது. இந்த விமானங் கள் மூலம் 400 நகரங்களை இணைக்க முடியும் என்று ரிலை யன்ஸ் டிபன்ஸ் நிறுவனத் தலை வர் எம். மாதேஸ்வரன் தெரிவித் துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் 51 சத வீத பங்குகளையும் அன்டோ னோவ் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும். தொடக்கத்தில் உக்ரைன் நிறுவ னத்திடமிருந்து விமான பாகங்கள் முற்றிலுமாக இறக்குமதி செய்யப் பட்டு இங்கு அசெம்பிள் செய்யப் படும். இந்தப் பணிகள் நாகபுரி யில் ரூ. 6,500 கோடி முதலீட்டில் உருவாகும் ஆலையில் மேற் கொள்ளப்பட உள்ளது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இறக்கு மதி செய்யப்படும் உதிரி பாகங்கள் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக் கப்பட்டவையாக இருக்கும்.

நாகபுரியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் திருபாய் அம்பானி ஏரோஸ்பேஸ் பார்க் தொழில் பூங்காவில் விமான உதிரி பாகங்கள் தயாரிப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

6 mins ago

வாழ்வியல்

16 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

40 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்