இவரைத் தெரியுமா?- ஆனந்த் மகேஷ்வரி

By செய்திப்பிரிவு

ஹனிவெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர். 2014 ஜனவரியிலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார். இந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.

ஹனிவெல் நிறுவனத்தில் இயக்குநர், தொழில் மேம்பாடு, ஹனிவெல் இந்தியா ஆட்டோமேஷன் தொழிலின் நிர்வாக இயக்குநர் என பல பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

குழுமத்தின் முக்கிய தொழிலான விண்வெளி, ஆட்டோமேஷன், தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களின் இந்திய செயல்பாடுகளுக்கு இவர் பொறுப்பு வகிக்கிறார்.

ஹனிவெல் இந்தியா நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் சர்வதேச விநியோக தொழில் நிறுவனமான ஏடிஐ நிறுவனத்தில் ஆசிய பசிபிக் பிராந்திய நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மெக்கன்சி அண்ட் கம்பெனியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மேலாண்மை ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம், மின் பொறியியல், உருக்கு, ஆட்டோமோடிவ், பார்மா, உள்ளிட்ட துறைகளில் உத்திகள் வகுப்பதில் வல்லுநர்.

பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தில் மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டமும், அகமதாபாத் ஐஐஎம்-இல் உயர்கல்வியும் முடித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்