என்எஸ்இ-யில் பட்டியலிட ஸ்பைஸ்ஜெட் திட்டம்

By செய்திப்பிரிவு

தொடர்ந்து ஐந்து காலாண்டு களாக லாபமீட்டி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தேசிய பங்குச்சந்தையில் (என்எஸ்இ) பட்டியலிட திட்டமிட்டு வருகிறது.

தற்போது இந்த நிறுவனப்பங்கு பிஎஸ்இயில் மட்டுமே வர்த்தகமாகி வருகிறது. மிகச்சில பங்கு கள் மட்டுமே என்எஸ்இயில் வர்த்தகமாகாமல் இருக்கும். அந்த சில பங்குகளில் ஸ்பைஸ்ஜெட்டும் ஒன்று. பொதுவாக பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரண்டு சந்தைகளிலும் பங்குகள் வர்த்தகமாகும்.

என்எஸ்இயில் வர்த்தகமாகும் போது அதிக மக்களுக்கு ஸ்பைஸ் ஜெட் பங்கு சென்றடையும். அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம் பிக்கை அதிகரிக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக் குநர் அஜய் சிங் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நிறுவனம் தொடங்கி இருப்பதாக அறிவிக் கப்பட்டிருக்கிறது. அதிக வரு மானம் மற்றும் குறைவான எரிபொருள் கட்டணத்தால் கடந்த மார்ச் காலாண்டில் 73.19 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனம் லாபமீட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்