50% சரிந்த பிட்காயின்: அள்ளிக் கொடுத்த கிரிப்டோகரன்சி அத்தனையும் வீழ்ச்சி; அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள் 

By செய்திப்பிரிவு

நியூயார்க்: பெரும் லாபத்தை அள்ளிக் கொடுப்பதாக கூறப்பட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு கடந்த சில தினங்களாக பெரும் சரிவு கண்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட மொத்த ஏற்றமும் தற்போது காலியாகியுள்ளது. பிட்காயின் மதிப்பு ஏறக்குறைய 50 சதவீதம் வீழ்ந்து விட்டது. இதனால் அதில் முதலீடு செய்த பலரும் பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாக இன்று இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி வெளியிடுபவர்கள் லாபம் பார்க்கின்றனர்.

கிரிப்டோகரன்சிகளில் முறைகேடான பணத்தை முதலீடு செய்யவும் முடியும். இது கறுப்புப் பணத்தை புழக்கத்தில் கொண்டுவரும் வழிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. வங்கிகள் மூலமான பரிவர்த்தனைகளில் முறைகேடான, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்பதால் இதுபோன்ற வழிகள் மூலம் அவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இதற்கு தடை விதிக்க அரசுகள் விரும்புகின்றன.

இந்தியாவும் கிரிப்டோகரன்சிகளை கடுமையாக எதிர்க்கிறது. கிரிப்டோகரன்சியை வரன்முறைபடுத்த அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்தியா சட்டம் கொண்டு வருகிறது.

கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் பணம் ஈட்ட முடியும் என்ற ஆசை உள்ளதோ அதே அளவுக்கு பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

50% வீழ்ந்த பிட்காயின்

இந்தநிலையில் கிரிப்டோகரன்சிகள் கடந்த சில தினங்களாக கடும் சரிவு கண்டு வருகின்றன. கிரிப்டோ சந்தையின் மூலதன மதிப்பானது நேற்று காலை 1.04 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. பின்னர் நேற்று மாலை நிலவரப்படி 12.06% சரிவினைக் கண்டு 24,167.79 டாலர்களாக சரிவினைக் கண்டது.

கிரிப்டோகரன்சிகளின் முதன்மையாக கரன்சியாக பார்க்கப்படும் பிட்காயின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. பிட்காயின் மதிப்பானது 25000 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. இதுமட்டுமின்றி அனைத்து ட்ஜிட்டல் கரன்சிகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன.

கிரிப்டோகரன்சிகள் இன்று மேலும் சரிவு கண்டன. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு பிட்காயின் மற்றும் ஈதர் நாணயங்கள் சரிவு கண்டன. பிட்காயின் 7.2 சதவீதம் சரிந்து 2020 டிசம்பரில் இருந்து 20,816 டாலராக குறைந்தது. பிட்காயின் இன்று வரை 50 சதவீதத்திற்கும் மேலாகவும் வெள்ளிக்கிழமை முதல் 28 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

இதுபோலவே ஈதர் 10 சதவீதத்தை இழந்து 1,075 டாலராக ஆக உள்ளது. இது ஜனவரி 2021 க்குப் பிறகு மிகக் குறைவான விலையாகும். இதுமட்டுமின்றி மதிப்பு குறைவான சிறிய வகை கிரிப்ட்டோ நாணயங்கள் இன்னும் அதிகமாக சரிவு கண்டு வருகின்றன.

என்ன காரணம்?

பணவீக்கம் உயர்ந்து வருவதால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால்அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறி வந்த முதலீடுகள் மீண்டும் சந்தையில் குவியத் தொடங்கியுள்ளன. இதன் காரண்மாக கிரிப்டோகரன்சிகளில் இருந்த முதலீடுகளும் வெளியேறத் தொடங்கியுள்ளன.

இதுமட்டுமின்றி முக்கிய கிரிப்டோ கடன் வழங்கும் நிறுவனமான செல்சியஸ் நெட்வொர்க்கின் முடக்கம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்து வருகின்றது. இதன் தாக்கமும் கிரிட்டோவர்த்தகத்தில் எதிரொலித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்