கடந்த நிதியாண்டில் டெல்லியின் தனிநபர் வருமானம் ரூ.2.8 லட்சம்

By செய்திப்பிரிவு

கடந்த நிதி ஆண்டில் டெல்லியின் தனிநபர் வருமானம் ரூ. 2.8 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் டெல்லியின் தனிநபர் வருமானம் 2.5 லட்ச ரூபாயாக இருந்தது. டெல்லியின் துணை முதலமைச்சர் மனிஷ் சிஸோடியா இதை தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தனிநபர் வருமானத்தில் டெல்லி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவில் 1.50 லட்ச ரூபாயும், பஞ்சாபில் 1.15 லட்ச ரூபாயும் தனி நபர் வருமானமாக இருக்கிறது. இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் 93,231 ரூபாய். இந்தியாவின் சராசரியை விட டெல்லியின் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு அதிகமாகும்.

மேலும் மாநிலத்தின் வளர்ச்சி சீராக இருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் கூறினார். மாநில ஜிடிபி முந்தைய 2014-15-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2015-16-ம் ஆண்டில் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. மத்திய பிரதேசம், பிஹார், ஹரியானா மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மாநில ஜிடிபியில் டெல்லி நல்ல இடத்தில் இருக்கிறதாகவும் அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்